\
சிம்ரன் பதிவு
சிம்ரன் பதிவுஎக்ஸ் தளம்

“எந்தவொரு பெரிய ஹீரோவுடனும் இணைந்து பணியாற்றும் ஆசை எனக்கு இல்லை” - நடிகை சிம்ரன்!

எந்தவொரு நடிகருடனும் இணைந்து பணியாற்றும் எண்ணம் இல்லை என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
Published on: 

சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சிம்ரன், தனது பெயரில் பரவும் வதந்திகள் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தன் பதிவில் அவர், “எந்தவொரு பெரிய ஹீரோவுடனும் இணைந்து பணியாற்றும் ஆசை எனக்கு இல்லை. எனது குறிக்கோள்கள் அனைத்தும் வேறுவிதமானவை. ஒரு பெண்ணாக எனது எல்லை எனக்கு தெரியும்.

இதற்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் என் பெயர் ஏதோ ஒரு விவகாரத்தில் பேசப்பட்டபோது அமைதி காத்தேன். ஆனால் சுயமரியாதை மிகவும் முக்கியம். ஆதலால் தற்போது STOP என்ற சக்தி வாய்ந்த வார்த்தையை தெரிவிப்பதே சரியாக இருக்கும்.

சிம்ரன் பதிவு
’தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க; அவங்க..’- பாடகியுடனான பழக்கம் குறித்து ஜெயம் ரவி பதில்!

என் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் முன்வரவில்லை. எனது உணர்வுகளை யாரும் புரிந்துகொள்ளவில்லை. என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்” எனவும் சிம்ரன் அந்த பதிவில் கூறியுள்ளார். நடிகை சிம்ரனின் படத் தயாரிப்பு திட்டத்தை நடிகர் விஜய் புறக்கணித்துவிட்டதாக செய்தி வெளியான நிலையில் நடிகை சிம்ரன் இந்தப் பதிவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com