ஈரானிடம் எரிபொருள் வாங்கும் 6 இந்திய நிறுவனங்கள்.. தடை விதித்த அமெரிக்கா!
ஈரானிய பெட்ரோலிய பொருட்களை வாங்கிய புகாரில் இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை தூண்டும் செயல்பாடுகளில் ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா, ஈரானின் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அவர்களுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா, இந்தோனேசியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 20 நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனங்கள் அமெரிக்காவுடன் வணிக தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே உக்ரைனுடன் போரை நிறுத்தாததால் ரஷ்யா மீது கடும்கோபத்தில் உள்ள ட்ரம்ப் அந்நாட்டிடம் எரிபொருளையும் ஆயுதங்களையும் வாங்கும் இந்தியாவுக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்தார். இது தவிர ஐரோப்பிய யூனியன் வாயிலாகவும் இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளித்து வருகிறது.