usa plane with 119 deported indians to land today
model imagex page

அமெரிக்கா டூ இந்தியா | மேலும் 119 பேர் இன்று வருகை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய மேலும் 119 பேருடன் தனி விமானம் இன்று இரவு பஞ்சாப் மாநிலத்திற்கு வர உள்ளது.
Published on

சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி கடந்த 5ஆம் தேதி 104 இந்தியர்களுடன் அமெரிக்க போர் விமானம் இந்தியா வந்தது. இதைத்தொடர்ந்து மேலும் 119 பேருடன் 2ஆவது விமானம் பஞ்சாப்பிற்கு இன்று இரவு வருகிறது. இவ்விமானத்தில் பஞ்சாப்பை சேர்ந்த 67 பேர், ஹரியானாவை சேர்ந்த 33 பேர், குஜராத்திலிருந்து 8 பேர், உத்தரப்பிரதேசத்திலிருந்து 3 பேர் வர உள்ளனர். கோவா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தானிலிருந்து தலா 2 பேரும் இமாச்சல், காஷ்மீரிலிருந்து தலா ஒருவரும் வர உள்ளனர்.

usa plane with 119 deported indians to land today
model imagex page

இது தவிர 3ஆவதாக ஒரு விமானம் நாளை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பஞ்சாபையும் பஞ்சாபிகளையும் மோசமாக சித்தரிக்கவே அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்கள் அமிதர்தசரசில் தரையிறக்கப்படுவதாக மத்திய அரசு மீது முதலமைச்சர் பகவந்த் மான் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து மொத்தம் 18 ஆயிரம் இந்தியர்கள் படிப்படியாக திருப்பியனுப்பப்பட உள்ளனர்.

usa plane with 119 deported indians to land today
நடவடிக்கையை தொடங்கிய அமெரிக்கா | நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. முதற்கட்டமாக 104 பேர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com