உ.பி. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திடீர் மரணம்! வாக்குப்பதிவு நடந்த மறுநாளே சோகம்!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ்
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் முகநூல்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ். 72 வயதான இவருக்கு தொண்டையில் சில பிரச்னைகளுக்கான அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை மோசமடைந்து நிலையில் உயிரிழந்துள்ளார். மொராதாபாத் தொகுதிக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. குன்வர் சர்வேஸ் உள்ளிட்ட 12 பேர் மொராதாபாத் தொகுதியில் வேட்பாளர்களாக இருந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்வர் சர்வேஸ்

குன்வர் சர்வேஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொராதாபாத் தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ்
வயநாட்டில் ராகுல்காந்தி ! மக்களின் பார்வை என்ன? - நேரடி கள நிலவரம்

ஐந்து முறை எம்.எல்.ஏவாகவும் இருந்த இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், குன்வர் சர்வேஸ் குமார் மறைவுக்கு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com