இந்தியா - பாகிஸ்தான் pt
இந்தியா
இந்தியா - பாகிஸ்தான் பதற்ற சூழல்... தணிக்கும் முயற்சியில் இறங்கிய ஐநா பொதுச் செயலாளர்!
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: ஐநா பொதுச் செயலாளர் தலையீடு
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்கும் முயற்சியில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இறங்கி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், தனித்தனியே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு, தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
அப்போது, மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதன் தேவை குறித்து எடுத்துரைத்த அன்டோனியோ குட்டரெஸ், பதற்றத்தை தணிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.