woman fined for eating food inside metroweb
இந்தியா
பசிக்குதுணு சாப்பிட்டது குற்றமா..? மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு அபராதம்!
பெங்களூரு மெட்ரே ரயிலில் சாப்பிட்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
என்ன நடந்தது?
பெங்களூரு மெட்ரோவில் உணவு உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறிய பெண் பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாதவராவிலிருந்து மாகடி ரோடு சென்ற ரயிலில் உணவு உட்கொண்டதை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு மெட்ரோவில் புகைப்பிடித்தல், வீடியோ எடுத்தல் போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.