ஓடும் பேருந்தில் மோதிக்கொண்ட பெண்கள்.. வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

அரசு பேருந்தில் பயணித்த பெண்கள், ஜன்னல் கண்ணாடியை திறக்கும் விவகாரத்தில் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
women's fight
women's fightpt

செய்தியாளர் - ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து கிருஷ்ணராஜபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கைகளில் முன், பின் அமர்ந்திருந்த இரு பெண்களுக்கிடையே, யார் பக்கம் அதிக அளவு ஜன்னல் கண்ணாடியை திறப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் செருப்பை கொண்டு தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளன.

women's fight
கர்நாடகா - 11 மாத குழந்தையின் தொண்டையில் உயிரோடு சிக்கிய மீன்கள்... கடவுளான மருத்துவர்கள்!

வாக்குவாதம் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். உச்சகட்டமாக, இருவரும் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதற்கிடையே, இருவரையும் ஓட்டுநர் சமாதானம் செய்ய முயன்றும், அவர்கள் தொடர்ந்து மோதிக்கொண்டது, சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கெல்லாமா சண்டைபோடுவது என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com