கர்நாடகா - 11 மாத குழந்தையின் தொண்டையில் உயிரோடு சிக்கிய மீன்கள்... கடவுளான மருத்துவர்கள்!

கர்நாடகாவில் உயிருள்ள மீன்களை விழுங்கி உயிருக்குப் போராடிய 11 மாத கைக்குழந்தையை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்புதிய தலைமுறை

கர்நாடக மாநிலம், தாவணகெரே அருகே உள்ள கஞ்சேனஹள்ளியை சேர்ந்தவர் யோகேஷ். இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு பிரதீக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் வீட்டு மீன் தொட்டியில் இருந்த மீன்களைக் குழந்தையின் பாட்டி எடுத்து குழந்தைக்கு விளையாட்டு காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக குழந்தை அந்த மீனை வாயில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது.

குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வசதி இல்லை எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைக் அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையின் உள் பகுதியில் 2 மீன்கள் சிக்கி இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து, மீன்களை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

இது குறித்து பேசிய மருத்துவர், "குழந்தையின் வாயில் ரத்தம் கொட்டியது. குழந்தைக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக செயற்கை சுவாச கருவி பொருத்தினோம். பின்னர் அறுவை சிகிச்சை மூலம், தொண்டையில் சிக்கி இருந்த 10 செ.மீ. நீளமும், 3 செ.மீ., அகலமும் கொண்ட ஜிலேபி வகை மீன்களை அகற்றினோம். வாயில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com