\
Trains cancelled, metro stations closed, What is happening in Delhi?
Delhi CJP ProtestANI

முக்கியத் தலைவர்கள் கைது.. ரயில்கள் ரத்து, மெட்ரோ நிலையங்கள் மூடல்.. டெல்லியில் நடப்பது என்ன?

ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் இளைஞர்கள், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும். சிலரைக் கைது செய்யும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Published on: 

நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் புதிதாக தொடங்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்திய சூழலில் அதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவின.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நீட் எதிர்ப்புப் போராட்டம் விரிவடைந்தது. பல கல்லூரிகளிலும் மாணவர்கள் இந்த நீட் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ANI

இந்தச் சம்பவம் முடிவடைந்து SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்தச் சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெறும் என கரப்பான் ஜனதா கட்சி அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை தடை விதித்த நிலையில், மத்திய அரசும் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, நேற்று இரவில் இருந்து, இன்று காலை வரை டெல்லி வந்து சேரும் பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கரப்பான் ஜனதா கட்சி நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்துக்குள் சென்ற டெல்லி போலீஸார் அவர்களை விமானத்துக்குள் வைத்தே கைது செய்தனர். மேலும், ஜந்தர் மந்தரை நோக்கி சக வழக்கறிஞர்களுடன் சென்ற கரப்பான் ஜனதா கட்சியின் சட்டக் குழு தலைவர் ரத்னா சிங்கும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதோடு ஜந்தர் மந்தரை நோக்கி செல்லும் இளைஞர்கள், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும். சிலரை கைது செய்யும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தை தடுக்க டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீ​ஸாரும், மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்​களும் குவிக்​கப்​பட்டு உள்​ளதாகவும், ஒட்டுமொத்தமாக 38,000 வீரர்​கள் டெல்​லி​யில் பாது​காப்​புப் பணியில் ஈடு​பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதனால் தலைநகர் டெல்லியே ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது.

Trains cancelled, metro stations closed, What is happening in Delhi?
"நாங்கள் காலனி நாடு கிடையாது.." எலான் மஸ்குக்கு கமல்ஹாசன் கண்டனம்.. பிரச்னைக்கு காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com