\
Kamal Haasan condemns Elon Musk
Kamal Haasan condemns Elon Musk.Reuters & ANI

"நாங்கள் காலனி நாடு கிடையாது.." எலான் மஸ்குக்கு கமல்ஹாசன் கண்டனம்.. பிரச்னைக்கு காரணம் என்ன?

எலான் மஸ்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Published on: 

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் பல்வேறு நிறுவனங்களில் முக்கியமான ஒரு நிறுவனமாக ஸ்டார்லிங்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிறுவி அதன்மூலம் உலகம் முழுவதும் இணையதள வசதியை அளித்து வருகிறது. ஸ்டார்லிங்க் அமைப்பின் அறிக்கையின் மூலம் இதுவரை 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், உலகளவில் அதிக இணைய வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

Reuters

ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்திய அரசு அதற்கு இதுவரை அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், இந்தியாவின் பல்வேறு தொழிலதிபர்கள்தான் ஸ்டார்லிங்க்குக்கு இந்தியா அனுமதி வழங்குவதைத் தடுத்து வருகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

Kamal Haasan condemns Elon Musk
எலான் மஸ்க் Vs இந்திய அரசு.. வெடிக்கும் சர்ச்சை.. ஸ்டார்லிங்க் விவகாரத்தில் அடுத்த திருப்பம்!

மேலும், செயற்கைக்கோள் இணையச் சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சில பெரும் நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் உள்ளே நுழைவதைத் திட்டமிட்டு முடக்குகின்றன என்றும், இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா.. பிரதமர் அம்பானி அவர்களுக்கு வணக்கம் என்றும் கூறியிருந்தார்.

எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் எலான் மஸ்க்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எந்தவொரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது என்றும், மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்பைக் கடைப்பிடித்துக்கொண்டே, பிற நாடுகளுக்குத் தாராள சந்தைகளைப் பற்றிப் போதிக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.

Kamal Haasan condemns Elon Musk
அம்பானி தான் முதலாளியா? நேரடியாக தாக்கிய எலான் மஸ்க்! பாஜக அரசுக்கு கேள்வி!

மேலும், பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவி (huawei) நிறுவனத்திற்குத் தடை விதித்துள்ளன. ஒரு நாடு தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இருக்கும்போது மட்டும் மற்றவர்களிடமிருந்து சமமான வாய்ப்பைக் கோர முடியாது என்றும், இணையதளத்தை உலகின் மிகவும் மலிவான ஒன்றாக மாற்றி, லட்சக்கணக்கானோரை இணையத்துடன் இணைத்த நமது தொலைத்தொடர்புத் துறையையும் அதன் விதிமுறைகளையும் நாம் பாராட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, இந்தியா ஒரு ஜனநாயக நாடு; காலனி நாடு அல்ல என்றும், நாம் உலகை வரவேற்கிறோம், ஆனால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com