கர்நாடகா | மனைவியுடன் வீடியோ கால் பேசியபடி தண்டவாளத்தை கடந்த நபர்.. ரயில் மோதியதில் உயிரிழப்பு!

மைசூரில் மனைவியுடன் மொபைல் போனில் வீடியோ கால் பேசியபடி தண்டவாளத்தை கடந்தவர் மீது ரயில் மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மனுகுமார்
மனுகுமார்pt

செய்தியாளர் - ம.ஜெகன்நாத்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனுகுமார். 26 வயதாகும் இவர், கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடின் தொட்ட கவலந்தே கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி பீகாரில் இருப்பதாக கூறப்படுகிறது. மைசூரில் கார்பெண்டராக பணியாற்றி வரும் இவர், தினமும் மனைவியும் செல்ஃபோனில் வீடியோ காலில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

ரயில் மோதி தொழிலாளி பலி
ரயில் மோதி தொழிலாளி பலி

அப்படி நேற்றும் வழக்கம்போல பணிக்கு நடந்து சென்ற அவர், அந்த நேரத்தில் மனைவியுடன் வீடியோ காலில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது, தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, அதே வழியாக சாம்ராஜ் நகரில் இருந்து, மைசூருக்கு சென்ற ரயில் அவர் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனுகுமார்
Village Food Factory முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள்.. என்ன ஆச்சு..?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நஞ்சன்கூடு ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தை கடக்கையில் கூடுதல் கவனத்தோடு இருந்தால், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கலாம் என்று கூறுகின்றனர் ரயில்வே போலீஸார்.

மனுகுமார்
ஒரு வணிகனின் கதை 20 | எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம் வேண்டும்! ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com