மகாராஷ்டிரா | அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டிப் பகுதியில் உள்ள ஒரு 4 மாடி கட்டடம் நேற்று இரவு 11.30 மணிக்கு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தின் அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 6 பேர் முதல் 7 பேர் வரை அஞ்சப்படுகிறது.
தொடர் மழை மற்றும் தூண் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இடிபாடு நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் 12 அறைகள் என 48 அறைகளைக் கொண்ட கட்டடத்தின் ஆபத்தான நிலை குறித்து ஏற்கனவே மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாகவே பலர் வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

