நிலவின் நீள்வட்ட சுற்றுக்குள் இணையும் சந்திரயான்-3!

நிலவின் சுற்று வட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் 3 விண்கலம். இன்றிரவு ஏழு மணியளவில் பூமியை விட்டு விலகி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல உள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி LVM ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலத்தின் பாதை சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு செய்யப்பட்டு வந்தது.

அடுத்தடுத்து பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான் விண்கலம் ஆக.1-ம் தேதி புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நொடிக்கு 10.5 கி.மீ வேகத்தில் நகர ஆரம்பித்தது.

சந்திரயான்-3
“PSLV, ஒரு பயணிகள் ராக்கெட்!” - முதுநிலை அறிவியலாளர் வெங்கடேஸ்வரன் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்!

இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் நிலவின் நீள்வட்ட சுற்றுக்குள் தன்னை இணைத்துக்கொள்கிறது சந்திரயான் 3. அடுத்த 20 நாட்கள் சந்திரயான் நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின் அது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com