“PSLV, ஒரு பயணிகள் ராக்கெட்!” - முதுநிலை அறிவியலாளர் வெங்கடேஸ்வரன் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்!

“ISRO-விலிருந்து அனுப்பப்பட்ட அந்த PSLV ராக்கெட், ஒரு பயணிகள் ராக்கெட். எப்படி நாம் வாடகைக் காரில் செல்லும் இடத்தை அடைகிறோமோ, அதேபோல் சிங்கப்பூர் தனது விண்கலத்தை இந்தியாவின் PSLV ராக்கெட் உதவியுடன் செயல்படுத்திக்கொண்டது” - முதுநிலை அறிவியலாளர்.
PSLV
PSLV@ISRO | Twitter

இஸ்ரோவிலிருந்து ஒரு செயற்கைக்கோள் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது இந்தியாவிலிருந்து ஏவப்பட்டது என்றாலும் கூட, முற்றிலும் சிங்கப்பூரின் செயற்கைக்கோளாகத்தான் அதனுள் இருந்தது. இந்த செயற்கைக்கோள் பற்றி முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) அவர்களிடம் பேசினோம்.

PSLV
7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்த 'PSLV-C56'ன் சிறப்பம்சங்கள் என்ன?
த.வி.வெங்கடேசன்
த.வி.வெங்கடேசன்

சமீபத்தில் அனுப்பப்பட்ட PSLV ராக்கெட், இந்திய செயற்கைக் கோள்களை கொண்டதா?

“இல்லை. இஸ்ரோவிலிருந்து அனுப்பப்பட்ட அந்த PSLV ராக்கெட்டானது ஒரு பயணிகள் ராக்கெட். புரியும்படி சொல்லவேண்டும் என்றால், எப்படி ஒரு வாடகைக் காரில் நாம் செல்லும் இடத்தை அடைகிறோமோ அதே போல் சிங்கப்பூரானது தனது விண்கலத்தை இந்தியாவின் PSLV ராக்கெட் உதவியுடன் செயல்படுத்திக்கொண்டது.

சிங்கப்பூரின் 7 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது சுமந்து சென்று அதன் பாதையில் நிறுத்தியது. அவற்றில் 6 விண்கலங்கள் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டது, 1 விண்கலம் இஸ்ரேலில் வாங்கப்பட்டுள்ளது”

சிங்கப்பூரின் இந்த செயற்கைகோள் இந்தியாவிற்கும் பயன்படக்கூடியதா?

“இது முழுக்க முழுக்க சிங்கப்பூரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய விண்கலம்தான். இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கான மொத்த செலவுகள் அத்தனையையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொண்டது. ஆகவே இந்தியாவிற்கு இதற்கான செலவு எதுவும் இல்லை”

PSLV
PSLVISRO, Twitter

ராக்கெட்டுகள் பற்றி முழுமையான விவரம் சொல்ல முடியுமா?

“PSLV, GSLV போன்ற ராக்கெட்களில் 3 கட்டுகள், 4 கட்டுகள் போன்ற கட்டமைப்பு இருக்கும். இதில் ஒரு கட்டை தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் கடலில் ராக்கெட் ஏவப்பட்ட பின்னான ஒவ்வொரு கட்டத்தில் விழுந்து விடும். ஆகவேதான் ராக்கெட் கிளம்பும் சமயம் கடலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்படும். கடைசியாக உள்ள அந்த ஒரு கட்டு மட்டும் விண்வெளிக்கு செல்லும். அங்கு அக்கட்டு, தன்னிடம் உள்ள விண்கலத்தை அதன் பாதையில் பொருத்தியப்பிறகு அதுவும் தன் வேலையை முடித்துக்கொள்ளும். பிறகு ஓரிரு நாட்கள் கழித்து ராக்கெட்டின் தேவையில்லா உதிரி கட்டுகள், காலாவதியான விண்கலங்கள் பூமியின் வளி மண்டலத்தில் உராய்வை ஏற்படுத்தி, அதனை வெப்பப்படுத்தி அழிக்கப்படும்.

இதுவரை சுமார் 7,000 விண்கலங்களை நாம் (இந்தியா) விண்ணில் செலுத்தி இருக்கிறோம். அதில் காலாவதியான செயற்கைக்கோள்களை அந்தந்த நாடுகள் அதன் பாதையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின் படி சமீப ஆண்டுகளாக தேவையில்லா விண்கலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன”

விண்வெளியில் செயல்பட்டு வரும் விண் குடில் பற்றி?

”சர்வதேச விண் குடில் (International space station) காலாவதியாகும் நிலையில் உள்ளது. 2024 அல்லது 2025ல் அது தனது செயல்பாட்டை இழக்க உள்ளது. அதையும் அதேபோல் தனித்தனியாக பிரித்து, வளி மண்டலத்தில் உராய்வை ஏற்படுத்தி அழிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் உள்ளனர்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com