தங்கம் விலையில் சரிவு.. அதிரடியாக நடந்த மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
உலகத்தில் உள்ள பல்வேறு வல்லரசு நாடுகளின் பொருளதாரத்தையே தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமான பொருளாக இருப்பது தங்கம். ஒரு தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், உலகின் ஏதோ ஒரு மூலை வரை அதன் பாதிப்பு எதிரொலிக்கும். மேலும், மிக பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக உள்ள தங்கம், 2026-ஆம் ஆண்டில் பெருமளவிலான சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெடரல் வங்கி அரசு பத்திரங்களின் மீதான வட்டியை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், பலரும் தங்கத்தை விற்பனை செய்துவிட்டு, பாதுகாப்பான மற்றும் அதிக வட்டியை தரும் அமெரிக்க அரசு பத்திரங்களை வாங்க முயல்கிறார்கள். இதுமட்டுமின்றி, சில முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை சமாளிப்பதற்காக, தங்களது தங்கத்தை விற்பனை செய்து பணமாக மாற்றுகிறார்கள்.
மேலும், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் மிகப்பெரிய விலையேற்றத்தை அடைந்தது. இதனால்ல, பல முதலீட்டாளர்கள் தங்களது தங்கத்தை விற்பனை செய்து, அந்த லாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். இந்த விற்பனை அழுத்தம் தங்கம் விலையை குறைத்துள்ளது. இவ்வாறு பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ச்சியாக சரிவை நோக்கி சென்று வருகிறது. இப்படியான சூழ்நிலையில், தங்கத்தின் விலை நிலவரம் குறித்து தகவல் வெளியாகி, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நவம்பர் 27-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 94 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது, தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், சரவனுக்கு 400 ரூபாய் குறைந்து, 93 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அதிரடியாக விலை குறைந்திருப்பது, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரும் இடியாக விழுந்துள்ளது.

