Headlines: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் 3 நாட்களாக தொடரும் சிறுவன் மீட்பு நடவடிக்கை வரை!
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ். 19ஆம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மொத்த கடன் 21 ஆயிரத்து 980 கோடி ரூபாயாக அதிகரிப்பு. 2017ஆம் ஆண்டு முதல் 3 மடங்கு கடன் அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல்.
தமிழக அரசின் வருவாய் 2022-23ஆம் நிதியாண்டில் 17 சதவீதம் அதிகரிப்பு. வருவாய் பற்றாக்குறை 36 ஆயிரத்து 215 கோடி ரூபாயாக குறைந்ததாக சிஏஜி அறிக்கையில் தகவல்.
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை திமுக அரசியலாக்குவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு. சட்டப்பேரவையில் முழு பூசணிக்காயை மறைக்கப் பார்ப்பதாகவும் விமர்சனம்.
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143ஆவது பிறந்தநாள் விழா. இந்நிலையில், பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சம்பல் வன்முறையில் உறவுகளை இழந்தவர்களை சந்தித்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி. வெறுப்பு மனநிலையை அன்புடனும் சகோதரத்துவத்துடனும் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க, மூன்றாவது போராடும் வீரர்கள். ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு சிறுவனை மீட்க முயற்சி நடந்து வருகிறது.
சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு. லெபனானில் இருந்து இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை.
சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு. பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை.
எக்ஸெல், அவுட்லுக் போன்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அவதி. 4 மணி நேரத்திற்குப் பிறகு செயல்பட ஆரம்பித்த நிலையில், கோப்புகள் பாதுகாப்பாக உள்ளதாக நிறுவனம் தரப்பில் விளக்கம்.
கோவில்பட்டியில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், சந்தேகத்தின்பேரில் மூன்று பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடவுளே அஜித்தே என்று அழைப்பது கவலையளிப்பதாக நடிகர் அஜித் குமார் அறிக்கை. பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள்.