இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள் | தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
    இதில், மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமம் ரத்து தொடர்பான தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

  • ஃபெஞ்சல் புயலால் பாதித்த கடலூர் மற்றும் புதுச்சேரியில் மத்தியக் குழுவினர் ஆய்வு நிவாரணம் தேவையில்லை; நிரந்தர தீர்வு வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தல்.

  • திருமாவளவனின் கையில் விசிக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல் என்றும் குற்றச்சாட்டு.

திருமாவளவன்
திருமாவளவன்
  • ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறார் என அண்ணாமலைக்கு திருமாவளவன் விளக்கம். மேலும், ஆனந்த் டெல்டும்டே மீது தீவிரவாத முத்திரை குத்துவது அநாகரீகமான அரசியல் என்றும் பதிலடி.

  • திருவண்ணாமலையில் தீபம் ஏற்ற கொப்பரை கொண்டு செல்லும் மலைப்பாதை வழுவழுப்பாக உள்ளது என ஆய்வு குழுவினர் தகவலால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என கேள்வி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஆதவ் அர்ஜுனா நீக்கமா? விசிக செய்தித் தொடர்பாளர் சொன்ன உறுதி தகவல்!
  • நெல்லையில் பணியில் இருந்தபோது "புஷ்பா-2" படம் பார்க்கச் சென்ற காவல் உதவி ஆணையர் வசமாக சிக்கிக் கொண்டதால், காவல் ஆணையர் கடிந்து கொண்டார்.

  • குறைந்த மூளையை கொண்ட முட்டாள்களுக்கு மரணமில்லை என்று அமிதாப் பச்சன் காட்டம். அரைகுறையான அறிவு குறைபாடுகளை மறைக்க ஒவ்வொரு நாளும் போலிகளை உருவாக்குவதாகவும் ஆதங்கம்.

  • சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் குழு.இந்நிலையில், விமானத்தில் தப்பிய அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்ததாக தகவல்.

  • சிரியாவில் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த கும்பல், கார்களையும் வாகனங்களையும் கொண்டு வந்து மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்றனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சிரியா: புண்ணிய பூமியில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட வறுமை.. தற்போதைய நிலைக்கு என்ன காரணம்?
  • சிரியா விவகாரத்தில் கூட்டாளிகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என அதிபர் பைடன் பேட்டி. தலையிடக் கூடாது டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தல்.

  • சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 11ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி. 6 - 5 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார்.

  • அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அபார வெற்றி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com