Headlines | வரலாறு காணாத அளவு உயர்ந்த முட்டை விலை முதல் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்ட பாலம் வரை!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி, செங்கல்பட்டு மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.
திருவண்ணாமலை நிலச்சரிவில் புதையுண்ட 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
வேண்டுமென்றே அரசியலாக்குவதற்காக தன் மீது சேறு வீச்சு என்று இருவேல்பட்டு கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா? என்று எதிர்க்கட்சிகள் மீது காவி வண்ணம் பூசி ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்ள நினைப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சனம்.
செங்கம் அருகே திறக்கப்பட்டு 5 மாதங்களில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்ட பாலம். வினாடிக்கு 3 லட்சம் கன அடி வரை வெள்ளம் பெருக்கெடுத்ததால் பாலம் சேதமடைந்ததாக அரசு தரப்பில் விளக்கம்.
தருமபுரி மாவட்டம் அருகே பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றால், கயிறு கட்டிக்கொண்டி கைகளை கோர்த்தவாறு கடந்து செல்லும் மக்கள்.
நடப்பாண்டில் மாநில பேரிடர் மேலாண்மை தொகுப்பிலிருந்து, தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாத நிதி என்றூ எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் நித்யானந்தராய் அளித்த பதிலில் தகவல்.
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 2025 ஏப்ரலுக்குள் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்சிபி காவலர்கள் இருவரை கைது செய்து, சென்னை காவல் துறை தீவிர விசாரணை.
நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து 5 ரூபாய் 85 காசாக நிர்ணயம். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தேவைகளை அடுத்து விலை அதிகரிப்பு.
சென்னையிலிருந்து கோவை சென்ற வந்தேபாரத் ரயிலில் ஒரு பெட்டியில் புகையால் மூச்சுவிட சிரமப்பட்ட பயணிகள். மின் கசிவு காரணமா தீ ஏற்பட்டு புகை வந்திருக்கலாம் எனத்தகவல்.
விண்ணுக்கு இன்று மாலை பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 59 ராக்கெட். இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா - 3 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
உள்நாட்டு குழப்பத்தை தொடர்ந்து தென் கொரியாவிீல் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய அதிபர் யூன் சுக் யோல். நாடாளுமன்றத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அறிவிப்பை ஒரு மணி நேரத்தில் வாபஸ் பெற்றார்
சில முயற்சிகளுக்கான பரிசோதனைக்கூடமாக பயன்படுத்த சிறந்த இடம் இந்தியா என தொழிலதிபர் பில் கேட்ஸ் கருத்து. இதற்கு, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
டிங் லிரன் - குகேஷ் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 5 மணி நேரம் நடைபெற்ற 7ஆவது சுற்றும் டிராவில் முடிந்தது.