காலை தலைப்புச் செய்திகள்| உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள் முதல் யுஜிசி நெட் தேர்வு ரத்து அறிவிப்பு வரை

இன்றைய தலைப்புச் செய்தியில் கள்ளச்சாராய விவகாரம் முதல் பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய விவகாரம்
கள்ளச்சாராய விவகாரம்pt web
  • கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது வருகிறது. 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • விஷச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதுவரை 29 பேர் மரணம்
தற்போதுவரை 29 பேர் மரணம்
  • சமூகத்தை பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விஷச்சாராயத்தை விற்ற வியாபாரி கண்ணுக்குட்டி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

கள்ளச்சாராய விவகாரம்
”ஒரு நாளைக்கு 1000 போன் வரை வந்தது; சிலர் கரெக்‌ஷன் சொன்னாங்க” - ’மகாராஜா’ பட இயக்குநர் நெகிழ்ச்சி!
  • தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

  • நாடு முழுவதும் நடந்து முடிந்த நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைகேடு புகார் எழுந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

NET2024
NET2024
  • இன்று காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி. சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • டி20 உலகக்கோப்பையில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சாராய விவகாரம்
கர்நாடகா: சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் - துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com