Accused with Police
Accused with Policept desk

கர்நாடகா: சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் - துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!

பிறந்தநாள் எனக் கூறி, கேக் வாங்கித் தருவதாக சிறுவனுக்கு கடத்திச் சென்று ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

ஓசூர் அடுத்த கர்நாடக மாநிலம் எல்லை அருகிலுள்ள எப்போதும் பரபரப்பாக காணப்படும், சிலிக்கான் சிட்டியான எலெக்ட்ரானிக் சிட்டி டோட்ட தூகூர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மார்வாடி அடகு கடை வைத்துள்ளார், இவருக்கு 9 வயதில் மகன் உள்ளார் இந்த நிலையில், நேற்று மாலை கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

Accused with Police
Accused with Policept desk

இதையடுத்து நேற்றிரவு சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்த மர்ம நபர், தங்களது மகனை கடத்தியுள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் பணத்தை ரெடி செய்து புகைப்படம் எடுத்து அனுப்பினால் மகனை காண்பிப்பதாகவும், எந்த இடத்திற்கு பணத்தை கொண்டு வர வேண்டும் என தெரிவிப்பதாகவும் கூறிவிட்டு போளை வைத்துள்ளார்.

Accused with Police
தொடர்கதையாய் மாறிப்போன தொடர்வண்டி விபத்துக்கள்; கேள்விக்குறியாய் மாறிப்போன பாதுகாப்பு

இதனால் அதிர்ந்து போன மார்வாடி எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போன் வந்த செல்போனை டிராக் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது, இதையடுத்து இன்று காலை போன் ஆன் செய்த உடனே போலீசாருக்கு தகவல் வந்தது, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Parent
Parentpt desk
Accused with Police
கர்நாடகா: கேம் டிவைஸ் ஆர்டர் செய்த பெண் - அமேசான் பார்சலில் வந்த பாம்பு!

இதைத் தொடர்ந்து சிறுவனை கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனை கடத்திய நபர் முஹம்மத் ஜெசி மதின் ஷேக் என்றும் ஏற்கனவே பல நாட்களாக மார்வாடி கடைக்கு சென்று வந்ததும் அந்த சிறுவனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. அதேபோல் நேற்று சிறுவனை கடத்திய நபர் தனக்கு பிறந்தநாள் என்றும் கேக் வாங்கித் தருவதாகவும் கூறி சிறுவனை கடத்திச் சென்று 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதும் தெரியவந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com