காலை தலைப்புச் செய்திகள் | IPL குவாலிஃபையர் ஆட்டம் முதல் கனமழை எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டம் முதல் கனமழை எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
மழை
மழைpt web
  • தமிழகத்தில் விழுப்புரம், புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்pt web
  • முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுத தமிழக அரசு திட்டம். கேரளா அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்த முடிவு.

  • மக்களவை 6ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில், 58 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது.

மழை
தோண்டத் தோண்ட அதிர்ச்சி! NIA கொடுத்த துப்பு; கொத்தாக மாட்டிய பாலியல் தொழில் சிண்டிகேட் கும்பல்!
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் "ராம்" என உச்சரிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஹரியானா பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • சென்னை தண்டையார்பேட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், வான் நோக்கி கரும்புகை எழுந்த நிலையில், 7 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே வாரத்தில் சிக்கியது 4 சிறுத்தைகள். இந்நிலையில் மீண்டும் சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்.

  • ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதப்போவது யார்? இன்று நடைபெறும் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com