காலை தலைப்புச் செய்திகள் | மீண்டும் சிசிடிவி பழுது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுது ஏற்பட்டுள்ளது முதல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • உதகை, ஈரோட்டை தொடர்ந்து தென்காசி வாக்கு எண்ணும் மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்.

 • ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டது உடனடியாக பழுது சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

 • வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

 • தொழிலாளர் சமுதாயம் உயர்ந்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து கூறியுள்ளனர்.

 • சென்னையில் வரும் 2025ம் ஆண்டு புதிய ஆலையை அமெரிக்காவின் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் அமையவுள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்.

 • பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம்.

 • மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இன்று இடம்பெயர்கிறார் குரு என்பதால் திருவாரூர் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு.

 • முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

நிர்மலா தேவி
நிர்மலா தேவிட்விட்டர்
 • சென்னையில் திருமணம் ஆகாமலே கர்ப்பமான செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதில் வயிற்றில் இருந்த குழந்தையின் கால்களை வெட்டி வெளியே எடுத்த கொடூரம்.

 • சென்னை அண்ணா சாலையில் உள்ள உணவகத்தில் தகராறு ஏற்பட்டத்தில் வாடிக்கையாளர்கள் - வடமாநில ஊழியர்கள் இடையே கைகலப்பு.

 • சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

 • ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30- க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

 • கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டநிலையில், மறு அறிவிப்பு வரை தடை தொடரும் என வனத்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 • போக்குவரத்து முனையம் பணிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • சென்னையில் உள்ள 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வரவுள்ளது.

 • தமிழகத்துக்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது என காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகா அரசு மீண்டும் திட்டவட்டம்.

 • பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வுக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
பாலியல் புகார்|கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
 • தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதில், காசாவில் மனிதாபிமான உதவிகளை துரிதபடுத்த நடவடிக்கை.

 • இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 • ஐபிஎல் தொடரில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ அணி.

 • ஐபிஎல்-ல் சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா?... சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியுடன் இன்றிரவு பலப்பரீட்சை.....

 • டி20 உலகக்கோப்பை தொடருக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு இடமில்லை. மேலும், சுப்மன் கில் உள்ளிட்ட நான்கு பேர் மாற்று வீரர்களாக அறிவிப்பு

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
T20 World Cup| இந்திய அணி அறிவிப்பு.. இடம்பிடித்த ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com