தலைப்புச் செய்திகள் | ரேவண்ணா குறித்து காங்கிரஸ் விமர்சனம் முதல் இளையராஜாவை சாடிய வைரமுத்து வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சிற்கு விளக்கம் முதல் பறவை காய்ச்சல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
 • பரப்புரையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அவற்றுக்கு விளக்கம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளும் அவகாசம் கோரியுள்ளது.

 • கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதரை அழைத்து மத்திய அரசு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

 • கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் முடிவு.

 • ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்வோருக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT
 • புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி கிராமத்தில் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை எனவும் சாணத்தை கலந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனவும் பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச் செய்திகள்
புதுக்கோட்டை: குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா? கிராமத்தில் மருத்துவ முகாம்!
 • நீலகிரியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராவில் பழுது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் அது இயங்கவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்.

 • வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த விவகாரத்தில் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 • சென்னையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச்சென்ற பொதுமக்கள்.

 • பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியால் கேரளாவில் இருந்து கறிக்கோழி மற்றும் முட்டைகளை தேனிக்குள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • ஈரோடு தாளவாடி அருகே 5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கணவரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

தலைப்புச் செய்திகள்
மதுரை - கலப்பு திருமணம்; கணவர் கொலை - “கொலைகாரங்க எதிர்லயே இருக்காங்க; எனக்கு அரசும் ஏதும் செய்யல”
 • குன்னூரில் பிரபல உணவகத்தில் தக்காளி சாசில் புழுக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து சோதனை செய்து மாதிரிகளை ஆய்வுக்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

 • மே 2, 3ஆம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜாவை சீண்டும் வகையில் பாடலாசிரியர் வைரமுத்து பேசிய விவகாரத்தில் இளையராஜாவை குறை கூறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கங்கை அமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கங்கை அமரன் - இளையராஜா-வைரமுத்து
கங்கை அமரன் - இளையராஜா-வைரமுத்துமுகநூல்
 • கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த்தால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 • ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய எம். பி பிரஜ்வால் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர்.

 • தேர்தலில் தோல்வியுற்றவர்கள் போலி வீடியோக்களையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள் என கர்நாடகா தேர்தல் பரப்புரையில் காங்கிரசை பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

 • எதிர்க்கட்சிகளின் அசைவுகளை அறியும் பிரதமருக்கு தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர் வெளிநாடு தப்பியது தெரியாதா? என பிரஜ்வால் ரேவண்ணா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி.

ரேவண்ணா, பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி
ரேவண்ணா, பிரதமர் மோடி, பிரியங்கா காந்திpt web
 • இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு எலான் மஸ்க் சீனாவுக்கு சென்றது சிந்திக்க வேண்டியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 • மணிப்பூரில் கலவரத்தால் நிறுத்தப்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள்
இந்திய பயணத்தை ஒத்திவைத்த ஒரு வாரத்திற்குள் சீனாவில் எலான் மஸ்க்! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?
 • உத்தரப்பிரதேசத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கம்புகளால் அடித்து பொதுமக்கள் சிறுத்தையை விரட்டியடித்தனர்.

 • வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு என இயற்கை பேரிடர்களால் தவிக்கும் காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 • சவுதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

 • பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதில், கலிபோர்னியாவில் இஸ்ரேல் ஆதரவாளர்களும் முழக்கமிட்டதால் வாக்குவாதம்.

 • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து எளிதில் வென்று அசத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 • நாளுக்குநாள் விறுவிறுப்படையும் ஐபிஎல் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் மும்பை - லக்னோ பலப்பரீட்சை.

 • இருபது ஓவர் கிரிக்கெட் உலக்கோப்பைக்கான இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு உள்ளது என பிசிசிஐ தேர்வுக்குழு அகமதாபாத்தில் இன்று ஆலோசனை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com