தலைப்புச் செய்திகள் | இன்றோடு நிறைவடையும் ‘புதிய தலைமுறை’யின் தேர்தல் பஸ் To அரசியல் பரப்புரைகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, நிறைவடையும் தேர்தல் பரப்புரை முதல் 6 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் படைத்த திரைப்படம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
 • முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவடையும் நிலையில், மாலை 6 மணிவரை வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 • பரப்புரை ஓய்ந்தபிறகு சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • “அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு அளிப்பது போன்றது. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தவர் இபிஎஸ்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்.

 • “பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக விலகியதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.

 • பெரம்பலூரில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று பெயிலில் இருக்கிறார்கள்; இல்லையென்றால் ஜெயிலில் இருக்கிறார்கள்” என விமர்சனம்.

 • பிரதமர் நரேந்திர மோடி, பணக்கார தொழிலதிபர்களுக்கே உதவுகிறார். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை பிரதமர் திசை திருப்புவதாகவும் என ராகுல் காந்தி புகார்

 • “கிராமப்புற பகுதியில் இருக்கும் அதிமுகவின் வாக்குகள், பாஜகவிற்கு வந்துவிட்டது. நடுநிலை வாக்காளர்கள் பிரதமர் மோடியின் பக்கம் இருக்கிறார்கள்” என அண்ணாமலை பேட்டி.

அண்ணாமலை
அண்ணாமலை
 • திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்புங்கள் என திண்டுக்கல் பரப்புரையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

 • ஆளுங்கட்சி, ஆண்ட கட்சிகள் செய்துவரும் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துங்கள் என பரப்புரை வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகளிடம் டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

 • வாக்காளர்களுக்கு பரிசு, பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து.

 • மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் விவரிக்க வேண்டும் என ஒப்புகைச்சீட்டு தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

 • 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகான நிறைவு விழா சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெறுகிறது.

தேர்தல்னா புதிய தலைமுறை
தேர்தல்னா புதிய தலைமுறை
 • விஜய பிரபாகரை விஜயகாந்தின் மறு உருவமாக எண்ணி வாய்ப்பளிக்க வேண்டும் என விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்.

தலைப்புச் செய்திகள்
"விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து ஒரு வாய்ப்பு தாருங்கள்".. உருக்கமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
 • மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வித்தியாசமான முறையில் ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள் போண்டா சுட்டுக்கொடுத்தும், பழ வியாபாரம், துணியை இஸ்திரி செய்தும் வாக்கு சேகரிப்பு.

 • தருமபுரி அருகே வாக்கு சேகரிப்பின்போது அதிமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே வாக்குவாதம் பிரசார வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சலசலப்பு.

 • “பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பேச்சு.

 • தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த சொக்கநாதர், மீனாட்சியம்மன் என மதுரை சித்திரை திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 • வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிமன்ற காவல் வரும் 20 ஆம்தேதி வரைநீட்டிப்பு.

சென்னை அழைத்துவரப்பட்ட ஜாபர் சாதிக்
சென்னை அழைத்துவரப்பட்ட ஜாபர் சாதிக்புதிய தலைமுறை
 • சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த 29 பேர் சுட்டுக்கொலை. துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை.

 • பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் அரசு எழுந்தநிலையில், நிர்ணயித்த தொகையை விட 25% வரை கூடுதலாக கேட்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

 • கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் துபாய் விமான நிலையத்தில் குளம்போல் தேங்கியதால் தண்ணீரால் விமான சேவைகள் ரத்து.

 • கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லரின் அதிரடி சதத்தால் இமாலய இலக்கை எட்டி அசத்தல்.

 • மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜிவிதம் வரிசையில் இணைந்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்’ திரைப்படங்கள் வெளியான 6 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்.

தலைப்புச் செய்திகள்
மலையாள படங்களுக்கு ஓஹோவென ஆதரவு கொடுப்பதன் நிஜ பின்னணி என்ன? தமிழ்ஆடியன்ஸ் மீதான விமர்சனங்கள் சரியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com