காலை தலைப்புச் செய்திகள் | விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம் முதல் மும்பை அணி தோல்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கச்சத்தீவு விவகாரம் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி வரை நேற்றைய, இன்றைய முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • அருணாச்சலப்பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா பெயரிட்ட நிலையில், எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய ராணுவம்.

 • அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்.

தலைப்புச் செய்திகள்
30 இடங்களுக்கு சீன மொழிப் பெயர்கள்.. அருணாச்சல பிரதேசத்தில் சீனா அட்டகாசம்.. பின்னணி என்ன?
 • சீனாவுக்கு பதிலடி கொடுப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.

 • கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமரும், கச்சத்தீவை தாரைவார்க்கும் காங்கிரஸ் முடிவுக்கு கருணாநிதி இசைவு தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சு.

 • “பிரதமர் மோடிக்கு திடீர் மீனவ பாசம் ஏன்? திசைத்திருப்பல்களில் ஈடுபடாமல் விடையளிக்கவும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.

தலைப்புச் செய்திகள்
கச்சத்தீவு பிரச்னை | “திசைதிருப்பல்களில் ஈடுபடாதீர்கள் பிரதமர் அவர்களே” முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
 • கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத பாஜக அரசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு வரலாற்றுப் பிழை செய்ததாக ஜி. கே.வாசன் விமர்சனம். மேலும் திமுக - காங்கிரசை நம்ப மீனவர்கள் தயாராக இல்லை என்றும் பேச்சு.

 • “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என அறிவித்த பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” என பாமகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்pt web
 • பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக தொடர்ந்திருக்க முடியாது என திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற பரப்புரையில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

 • தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் பெயரில் இருப்பவர்களை தனக்கு எதிராக ராமநாதபுரத்தில் களமிறக்கியுள்ளனர் எனவும், கேட்ட சின்னம்கூட கிடைக்கவில்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆதங்கம்.

 • வாக்களிக்க தாமதமாக சென்றால் கள்ள ஓட்டு போட்டுவிடுவார்கள் என திருச்சியில் பரப்புரை செய்த பிரேமலதா வாக்காளர்களுக்கு எச்சரிக்கை.

 • சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளதாகவும், தமிழ் இனத்தை அழித்த கட்சியோடு தங்கத் தமிழ்செல்வன் கூட்டணி வைத்திருப்பதாகவும் சீமான் விமர்சனம்.

பரப்புரையில் சீமான்
பரப்புரையில் சீமான்ட்விட்டர்
 • தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 3 ஆண்டுகளில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு என மத்திய அரசின் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

 • விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடியின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களுக்கு 100 ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகவும், 200 ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு, 100 ரூபாய் கொடுத்ததாகவும் பெண்கள் ஆதங்கம்.

 • திருப்பத்தூர் அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்த தம்பதியை காவல்துறை விசாரணை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது.

 • தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 • விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து சேதம்

 • செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை பெய்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.

 • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் கதவு அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டியபோது 5 பழங்கால குடுவைகள் கண்டெடுப்பு.

 • கொல்லங்கோடு பத்திர காளியம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா கொடியேற்றத்துடன் தொடகங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 • பிணை கோரி செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ். விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

தலைப்புச் செய்திகள்
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
 • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 • மக்களவை தேர்தலில் அனைத்து விவிபேட் இயந்திரங்களிலும் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

 • சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர் உட்பட 11 பேர் உயிரிழப்பு.

 • மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். மற்றொரு புறம், மும்பை அணி, எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி மோசமான சாதனை படைத்து வருகிறது.

தலைப்புச் செய்திகள்
RR vs MI | 0 வெற்றி... கலாய்க்கும் ரசிகர்கள்! Hardik-க்கு ஹாட்ரிக் தோல்வி!
 • ஒலிம்பிக் போட்டிக்கு 3ஆவது முறையாக தகுதி பெறும் மீராபாய் சானு, பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2ஆம் இடம் பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com