இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கச்சத்தீவு பிரச்னை முதல் சென்னை அணி தோல்வி வரை நேற்றைய பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரை
கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரைPT Web

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸ், துணை போனது திமுக என பாஜக குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் “10 ஆண்டுகளாக பிரதமர் என்ன செய்தார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 • தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

 • “தமிழர்களின் பூமியான கச்சத்தீவை அரசியல் ஆதாயத்திற்காக இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ் அரசு. இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான தீயசக்தி காங்கிரஸ்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரை
திடீரென கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக; 2016ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னது என்ன?
 • “பாஜக ஆட்சியில் இதுவரை மக்கள் பார்த்தது டிரெய்லர்தான். நாட்டை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்” என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

 • “I.N.D.I.A கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்படும்” என கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
 • “I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்யும் பாஜகவினர் சிறைக்கு செல்வார்கள். ஊழல் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி உபதேசம் செய்யலாமா?” என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • “தோல்வி பயத்தில் உள்ளதால்தான் எதிர்க்கட்சித் தலைவர்களை கைதுசெய்து வருகிறது பாஜக அரசு” என ஈரோடு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 • “நான் என்ன தடியை எடுத்துக்கொண்டு போய் மோடியை எதிர்க்க வேண்டுமா?” என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

 • “தேர்தல் வரும்போதெல்லாம் மாம்பழம் மாறிப்போகிறது” என பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
 • “திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சி எப்படி இருந்தது என தேர்தல் முடிவுகள் வந்தால் தெரிந்துவிடும்” என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

 • “திமுக ஆட்சி என்றாலே இருண்ட கால ஆட்சிதான்” என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

 • “பாஜகவில் தோல்வியடைபவர்களுக்கு ஆளுநர் பதவி காத்திருக்கிறது” என புதுச்சேரி தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கணிப்பு.

 • “காங்கிரஸ், பாஜக ஆட்சிகளால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை” என வடிவேலு காமெடியை சுட்டிக்காட்டி சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

 • “இந்தியாவில் கடந்த 10 வருடங்களாக காமராஜர் ஆட்சி நடைபெற்று வருகிறது” என விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

 • “ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம்” என நினைக்கிறார்கள் என்று விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்ட்விட்டர்
 • “செந்தில் பாலாஜியை விமர்சித்து விட்டு பின் அமைச்சராக்கியவர்தான் ஸ்டாலின். ஆகவே, ஊழல் குறித்து அவர் பேசலாமா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • நெல்லை பணகுடிக்கு பரப்புரைக்கு சென்றபோது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரை
டெல்லி: “EVM, மேட்ச் ஃபிக்சிங் இல்லையெனில் பாஜக 180 இடங்களில் கூட வெல்லாது” - ராகுல் காந்தி
 • நாடாளுமன்றத்திலும் கெஜ்ரிவால் என முழக்கம் விடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரையை தொடங்கியது.

 • கர்நாடகாவில் தகராறைத் தடுக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தி கோவில் திருவிழாவில் இளைஞர்கள அத்துமீறல்.

 • அசாம், மணிப்பூர் மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கவுகாத்தி விமான நிலையத்தில் மேற்கூரை உடைந்து உள்ளே புகுந்த மழைநீர் புகுந்தது.

 • மடகாஸ்கர் நாட்டில் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம் தேக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

 • ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஜெர்மனியில் முட்டை வீசும் போட்டி நடைப்பெற்றது. இதில், பல மீட்டர் தூரத்திற்கு வீசி எறிந்து மக்கள் உற்சாகம்.

 • துபாயில் நடைபெற்ற சர்வதேச பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்த டிரோன் ஷோ.

 • ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அதிரடி காட்டியும் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தபிறகு, தல தோனியின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது. பேட்டிங் செய்ய தோனி களத்திற்கு வரும் போது 128 டெசிபல் என சத்தத்தால் அதிரவிட்ட ரசிகர்கள், இது விசாகப்பட்டினமா இல்லை சேப்பாக்கமா என்ற கேள்வியை எழவைத்தனர்.

 • நேற்றைய டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் இறுதியில், 16 பந்துகளில் 231 ஸ்டிரைக்ரேட்டில் 37 ரன்களை குவித்த தோனி, ‘தோத்தாலும் பரவால்ல; இன்னைக்கு இதுபோதும்... அடுத்த 4 மேட்ச்க்கு தேறும்’ என்ற உணர்வை சிஎஸ்கே ரசிகர்களுக்கு வழங்கினார். தல தோனி தரிசனம் கிடைத்ததில் ஹேப்பி அண்ணாச்சி என்று ரசிகர்கள் இருந்தாலும், சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

கச்சத்தீவு பிரச்னை முதல் ‘தல தரிசனம்’ வரை
’தல’ முதல் அடி வர தலைவரு அலப்பற.. களத்தில் கர்ஜித்த தோனி! தரமான கம்பேக் கொடுத்த Pant! DC வெற்றி!
 • ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com