காலை தலைப்புச் செய்திகள் | திமுக வேட்பாளர் பட்டியல் முதல் 200 கோடி வசூல் செய்த மஞ்ஞுமல் பாய்ஸ் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று வெளியாக உள்ள திமுக வேட்பாளர் பட்டியல் முதல் 200 கோடி வசூல் செய்த மலையாளத் திரைப்படம் வரை பல முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள்.

  • திமுக தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!
  • எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி சந்திக்கவுள்ள நிலையில்,மக்களவை தேர்தல் கூட்டணியை அதிமுக இன்று இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவால் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூக்கம் தொலைந்து விட்டது என்று சேலம் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • பிரதமர் மோடிக்குதான் தூக்கம் தொலைந்துவிட்டதாகவும், தோற்கப்போவதை அவரே உணர்ந்துவிட்டார் எனவும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பதில் விமர்சனம்.

  • தேர்தல் பரப்புரைக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பிரதமர் மோடி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

  • கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற விவகாரத்தில் சாய்பாபா வித்யாலயம் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|
கோவை: பிரதமரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு... விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு!
  • மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டிட அனைவரும் ஒத்துழைப்பை நல்கவேண்டும் என கூட்டணிக்கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றார் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே

  • புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.

வழியனுப்பி வைக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன்
வழியனுப்பி வைக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன்புதிய தலைமுறை
  • மே 26ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி அறிவிப்பு.

  • போதைப்பொருள் கடததல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலி வைக்க வேண்டும் என போதைப்பொருள் கடத்தல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • வேலூரில் அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளர் அலுவலகத்தில் வருமானம் வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்புதிய தலைமுறை
  • கடத்தப்பட்ட குழந்தையை மீட்கப்போன இடத்தில் மேலும் மூன்று குழந்தைகளை கண்டுபிடித்தனர் தூத்துக்குடி காவல்துறை.மேலும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

  • கொடைக்கானலில் 5 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது .மேலும், மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுக்க வனத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்

  • தென்காசி மாவட்டம் கடையம் அருகே 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழிடப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டநிலையில் அங்கிருந்து தங்கவளையம், வட்டச்சில்லுகளை தொல்லியல் குழுவினர் கண்டெடுத்தனர்.

  • பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

  • நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு முக்கிய மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய உள்துறை செயலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

CAA issue
CAA issuePT
  • இலங்கையில் இந்தாண்டுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

  • ஈராக்கில் கனமழை கொட்டியதால் வெள்ளக்காடாக மாறியது குடியிருப்பு பகுதிகள்.மேலும், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

  • ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தன. இந்நிலையில், 40 சதவீத டிக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் ரிஷப் பந்த். காயத்தில் இருந்து மீண்டதை அடுத்து அணி நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • கேரளாவில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்தநிலையில், தனது பாணியில் செல்ஃபி எடுத்து அன்பை பொழிந்தார் நடிகர் விஜய்.

  • மலையாள சினிமாவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்று சாதனை மேல் சாதனை படைத்துவருகிறது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|
Manjummel Boys: தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - ரூ.200 கோடியை கடந்து வசூல் சாதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com