தலைப்புச் செய்திகள் | மக்களவை தேர்தல் தேதி முதல் தமிழ்நாட்டின் 4 புதிய மாநகராட்சிகள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு முதல் 4 புதிய மாநகராட்சிகளின் விவரங்கள் வரை
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • மக்களவை தேர்தல் தேதியை இன்று பிற்பகலில் அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு.

  • புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனியாக மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • அமலாக்கத்துறை பணப்பதுக்கல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விசாரணையை தொடர டெல்லிக்கு அழைத்து சென்றார்.

  • தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி துடைத்து எறியப்படும் என கன்னியாகுமரி பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..

  • கோவையில் வருகிற 18ஆம் தேதி பிரதமர் மோடி, வாகன பேரணி செல்ல அனுமதி காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, உயர்நீதிமன்றத்தை நாடி பாஜக அனுமதி பெற்றது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • மத்திய புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட PM SHRI பள்ளிகள் தமிழகத்தில் நிறுவ விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மத்திய கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • தேர்தல் பத்திரங்களின் எண்களை ஏன் வெளியிடவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • உச்சநீதிமன்றம், விவரங்கள் கேட்காத 15 மாதத்தில் 5,813 பத்திரங்களை வாங்கியது யார்? என ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த எஸ்.பி.ஐ வங்கி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
பினாமி நிறுவனம் பெயரில் தேர்தல் பத்திரங்களை வாங்கியதா கார்ப்பரேட் குழுமங்கள்?
  • மிரட்டி பணம் பறிக்கும் உலகின் மிகப்பெரிய மோசடியே தேர்தல் பத்திரங்கள்தான். இந்த தேர்தல் பத்திரத் திட்டம் பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவானது என ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியளிக்கவுள்ளதாக தகவல்.

  • நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா கரும்பு விவசாயி சின்னம்? தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.

  • அதிமுக பெயர், சின்னத்தை பயன்படுத்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

  • தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகாராஷ்டிராவின் ராய்காட்டில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார்.

  • தமிழகத்தில் இந்த கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ரோஹித் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  • சென்னை மாநகரப் பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணித்த சிறுவன் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

  • அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்துவைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வினோத வழக்கில், மரங்களுக்கு திருமணம் செய்துவைப்பதை புனிதமாக கருதுவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி.

  • கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார் பார்கிங் பகுதியில் ஆக்ரோஷத்துடன் தாக்க பாய்ந்த ஒற்றை யானையால் அலறியடித்துக்கொண்டு ஓடி அங்கிருந்து மக்கள் தப்பி ஓடினர்.

  • கொடைக்கானல் பழனி சாலையில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் புல்வெளிகள் நாசம் ஆகின. இந்த பசுமை அழிந்து கருமை படர்ந்ததை பதிவு செய்த பருந்துப் பார்வை காட்சிகள்.

  • நெல்லை மாவட்டத்தில் பேருந்தை உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு 78 ஆயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
நெல்லை - நிற்காமல் சென்ற அரசு பேருந்து; பயணிகள் புகார்.. ஓட்டுநர், நடத்துனருக்கு நீதிமன்றம் அபராதம்!
  • புதுச்சேரி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 50 விழுக்காடாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ சட்டம். இந்நிலையில், வழக்கு விசாரணை சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கர்நாடக Ex CM எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு CIDக்கு மாற்றம்!
  • பரபரப்பான எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி மகளிர் பிரீமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நுழைந்தது பெங்களூரு அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com