இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | மகா சிவராத்திரி முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மகா சிவராத்திரி முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று இரவு நடைபெற்றது. இரவு முழுவதும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

  • கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் தன்கர், சந்தானம், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

  • வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

  • சிறந்த படைப்பாளர்களுக்கான விருது விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.
  • மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் ஆய்வுகள் முடியாததால் தேதிகளை முடிவு செய்வதில் தாமதம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • திருவனந்தபுரத்தில் சசிதரூர், ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபால், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி மற்றும் டி.கே.சுரேஷ் போட்டியிட வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சி.

  • மக்களவைத் தேர்தலுக்கான 39 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டி.

  • திமுக - விசிக இடையேயான தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திமுக - விசிக தொகுதிப்பங்கீடு
திமுக - விசிக தொகுதிப்பங்கீடுட்விட்டர்
  • திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிட திட்டம். எந்த தொகுதி என விரைவில் அறிவிக்கப்படும் என வைகோ பேட்டி அளித்துள்ளார்.

  • ‘அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாவது எப்போது?’ என்ற கேள்விக்கு வெகு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

  • பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தார் ஓ பன்னீர்செல்வம். மேலும், மக்களவைத் தேர்தலுக்கான விருப்பமனு நாளை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து முதல் நபராக கட்சியில் சேர்ந்தார் நடிகர் விஜய். மேலும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணம் என விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
Women's Day | பாலியல் வன்கொடுமைகளுக்கு பழகிவிட்டதா இந்தியா? தொடரும் கொடூரங்களுக்கு தீர்வுதான் என்ன?
  • தேர்தலில் டிஜிட்டல் பணபரிமாற்றத்தை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார்.

  • அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக ஆசிரியை பணியிடை நீக்கம். மேலும்,மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என டிடிவி தினகரன், சீமான் வலியுறுத்தியுள்ளனர்.

  • அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைக்கப்பட்ட குழுக்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • சிறுமி உயிரிழப்புக்கு நீதி கேட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடையடைப்பு, இந்தியா கூட்டணி பேரணி, அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் போன்றவை நடத்தப்பட்டது.

  • தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 12ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்

படகுகள்
படகுகள்புதிய தலைமுறை
  • குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வேறு நீதிமன்றங்களில் சரண் அடைவதை ஏற்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • வாரயிறுதி விடுமுறையையொட்டி பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தமிழக - கர்நாடகா எல்லையில் இரவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

  • வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் நாளை திறக்க உள்ளதாக தகவல். மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவக நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • கர்நாடகாவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

  • வழிபாடு செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்தது டெல்லி காவல்துறை.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்சில் 473 ரன்களை குவித்து வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.

  • மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. கிரேஸ் ஹாரிஸின் அபார பந்துவீச்சால் கடைசி ஓவரில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com