தலைப்புச் செய்திகள் | பிரதமர் சென்னை வருகை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிரதமர் மோடியின் சென்னை வருகை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

 • பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 • இளைஞர்கள், விவசாயிகளுக்கு மோடி அரசால் அநீதி இழைக்கப்படுகிறது என பாட்னா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

 • “பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் வாக்குகளை பெற முடியாது. தமிழ்நாட்டை பிரதமர் வஞ்சிக்கிறார்” என்று திமுக எம். பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழிTwitter
 • பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஆந்திர நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

 • ரயிலில் போதைப்பொருள் கடத்தியதாக மதுரையில் பிடிபட்டவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 • திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
 • சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை செலுத்தினார். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியில் கருணாநிதியுடன் கலந்துரையாடினார்.

 • சென்னையில் பாஜக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.மேலும் தொகுதி எண்ணிக்கை குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் விளக்கமளித்துள்ளார்.

 • நாம் தமிழர் வாக்கை குறைப்பதற்காக கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டதாக சீமான் குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரவிருப்பதாகவும் பேட்டி அளித்துள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியது ஏன்? வழக்கு போடுவோம்” - சீமான் குற்றச்சாட்டு
 • பெங்களூரு உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனம் குறித்து வௌியான தகவல் வெளியாகியுள்ளது.

 • தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ளது. 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

 • தருமபுரம் ஆதீன மடத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மடத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

 • இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, அரியலூர் அருகே ஆதி திராவிட மக்கள் சமைத்தும் உண்ணும் போராட்டம் மேற்கொண்டனர்.

 • கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில், இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.

 இமாச்சல பிரதேசத்தில் பனிக்காலம்
இமாச்சல பிரதேசத்தில் பனிக்காலம்PTI
 • மார்ச் 10ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது. டெல்லி நோக்கிய பேரணியை பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டம்.

 • வெண் போர்வை போர்த்தியது போல் வீதிகளை ஆக்கிரமித்த பனியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.

 • மகாராஷ்டிராவில் பாத்திரத்துக்குள் தலை சிக்கி தவித்த சிறுத்தையை நீண்ட போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

 • தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேம்படுத்த ராஜஸ்தானில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்கள் கூட்டு போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 • காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்த பூமி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், புத்த கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

 • இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் பசியில் வாடும் மக்களுக்கு விமானம் மூலம் காசாவில் உணவு பொட்டலங்களை வழங்குகிறது அமெரிக்கா.

 • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
WTC புள்ளிப்பட்டியல்: சைலண்டாக முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா.. காரணம் இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com