காலை தலைப்புச் செய்திகள் | ‘தமிழகம் வரும் பிரதமர் மோடி’ முதல் ‘கலைஞர், அண்ணா நினைவிடம் திறப்பு’ வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று தமிழகம் வரும் நரேந்திர மோடி முதல் மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு இன்று தேர்தல் வரை முக்கிய நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

 • சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடம் - திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடம் - திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
 • மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம் என திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

 • 2ஆவது கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் 3 தொகுதிகளை கேட்டதாகவும், மார்ச் 3ஆம் தேதிக்குப் பின் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

 • பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

 • அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுமுடிந்தநிலையில் பாஜகவும் பேசி வருவதாக சமக தலைவர் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
அதிமுக-வா பாஜக-வா? தேர்தல் கூட்டணி யாருடன்? “ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்” - சரத்குமார்
 • மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? என ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.

Anbumani
Anbumanipt desk
 • கோவையில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி திடீர் ரத்து. பிரதமர் வருகையால் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

 • சிவகங்கையில் அரசு விழாவில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் - பாஜக மாவட்ட தலைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரசியல் பேசக்கூடாது என பாஜகவினர் தடுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

 • மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 31 இடங்கள் வரை பிடிக்கும் எனவும், அதிமுக மற்றும் பாஜகவுக்கு தனித்தனியே நான்கு முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் என புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.

 • திமுக கூட்டணிக்கு 15 சதவிகித வாக்குகள் குறைந்து 38 விழுக்காடு கிடைக்கும் என்றும், பாஜக 18, அதிமுக 17 விழுக்காடு வாக்குகள் பெறும் என புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 • இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது. திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் வீட்டில் சம்மனை ஒட்டிய காவல்துறை.

 • “தயாரிப்பாளர் ஜாஃபர் மீதான புகார் உண்மை என்றால் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால் தொடர்ந்து பணியாற்ற மாட்டேன்” என நடிகர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

 • சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்று பிரார்த்தனை.

 • செங்கல்பட்டு அருகே 45 நிமிடங்களாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • திண்டுக்கலில் திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிய கொலை வழக்கில், முன் விரோதம்தான் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 • தேவகோட்டை அருகே கொள்ளை நடந்த இடத்தை அடையாளம் காண அழைத்து சென்ற போது தப்ப முயன்ற குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்த காவல்துறையினர்.

 • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை நீதிமன்றம்
மதுரை நீதிமன்றம்
 • திருவண்ணாமலையில் கோலாட்டம் ஆடிய பாடி கிரிவலம் சென்ற பெண்கள் உலக நன்மைக்காக சிறப்பு வேண்டுதல்.

 • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பதில் அளித்துள்ளார்.

 • மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • கேரளாவில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா.

 • இந்திய லோக் தள கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

 • மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் தடுப்பணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 • PAY TM பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா ராஜினாமா செய்துள்ளார். மேலும் வங்கிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா. ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கி கொண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com