இன்றைய காலை தலைப்புச்செய்திகள்|சென்னை மேயர் பிரியா கார்விபத்து முதல் பைஜுஸ் நிறுவன CEO விவகாரம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சென்னை மேயர் பிரியா கார் விபத்து முதல் பைஜுஸ் நிறுவன CEO வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய  காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய  காலை தலைப்புச் செய்திகள்

  • பஞ்சாப்- ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
    அதுவரை தற்போது போராட்டம் நடத்திவரும் இரு இடங்களிலேயே தங்கியிருக்கபோவதாக கூறியுள்ளனர்.

  • சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடைப்பெற்றது. அதில் வாக்கு ஒப்புகைச் சீட்டு முறையில் குளறுபடி ஏற்படுமோ என சந்தேகம் உள்ளதாக திமுக புகார் அளித்தது.

  • வாக்குச்சாவடிதோறும் துணை ராணுவப்படை வீரர்களை நிறுத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளார்.

  • தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என வலியுறுத்திய அரசியல் கட்சிகள்.மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • தலைமைத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி.

  • மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம், அசாம் மாநிலங்களில் வெல்லப் போவது யார்? என புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

  • சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • தாமரை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கூறிய நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடனே கூட்டணி அமையும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் திட்டவட்டம்.

  • மக்களவைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். மேலும் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட விருப்ப மனு அளித்துள்ளனர்.

  • சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து சிக்கியதில் காயமின்றி தப்பினார் மேயர்.

  • அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகளுக்கு பதில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது ஏன் என்று மணல் குவாரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் தவிர்த்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 15 பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா பேட்டியளித்துள்ளார்.

  • சட்டவிரோத பணப்பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.

  • கொடநாடு பங்களவை ஆய்வு செய்ய, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஆய்வுப்பணிகளை வீடியோவாக பதிவு செய்து சமர்ப்பிக்க உத்தரவு.

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும் என்று பொது தீட்சிதர்கள் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

  • இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கம் மன்னார் வளைகுடா கடலில் வீசப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கடல் பகுதி முழுவதும் தேடும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்.

  • ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டித்தருவதாக கூறி 15 கோடி ரூபாய் மோசடி செய்ததில் நான்கு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

  • திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒப்புதல் கடிதம் மூலம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  • கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆட்டோ ஷெட்டில் தீ விபத்தில், 30-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டது.

  • உத்தரப்பிரதேசத்தில் காவலர் பணிக்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தநிலையில், ஏராளமான போட்டித் தேர்வர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க பங்குதாரர்கள் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நிறுவனர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  • சீனாவின் உளவியல் விளையாட்டுகள், இருதரப்பு உறவுகளுக்கும் பெரும் சவாலாக இருந்துவருகின்றன . ஆகவே பழைய நிலையை ஒண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யாவில் உயிரிழந்த எதிர்க்கட்சித்தலைவர் நவல்னியின் உடலை ஒப்படைக்க நிபந்தனை விதித்த அரசு. ஆனால் நவல்னியின் தாய் அதனை ஏற்க மறுத்து காவல்துறையில் புகார்.

  • இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் நாளில் 302 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. சதமடித்து சரிவில் இருந்து அணியை மீட்டார் ஜோ ரூட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com