தலைப்புச் செய்திகள் | விவசாயிகளின் போராட்டம் முதல் அமரன் படத்திற்கு எழுந்த எதிர்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது விவசாயிகளின் மீது ரப்பர் குண்டு தாக்குதல் முதல் அமரன் திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • பஞ்சாப் - ஹரியானா எல்லையில் நடந்த போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு. மேலும் ரப்பர் குண்டுகளால் காவல்துறை தாக்குதல் நடத்தியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

  • பேரணியை இரண்டு நாட்கள் நிறுத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளின் மரணத்துக்கு பாஜக அரசு பதில் சொல்லியாக வேண்டும் என ராகுல்காந்தி ஆவேசம்.

  • கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக அதிகரிப்பு என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

  • வேலைவாய்ப்பு, அரசியலில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இனி யாராலும் முடக்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டம். மேலும் தேர்தல் நெருங்கும் போது திமுக கூட்டணி உடையும் என்றும் ஆருடம்.

  • தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார விவாதம்.

எடப்பாடி பழனிச்சாமி  , மு.க ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி , மு.க ஸ்டாலின் Twitter
  • ஒவ்வொரு குடும்ப அட்டை மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் என தமிழக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

  • முழுநேர அரசியல்வாதி என யாரும் இல்லை. அரசியல்வாதி என மக்கள் நினைக்கும் பலர் வியாபாரிகளாக இருக்கிறார்கள் என கமல்ஹாசன் பேச்சு.

  • கூவத்தூர் விவகாரம் தொடர்பான அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்குமாறு ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில் உரிய நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாசும் புகார் அளித்துள்ளார்.

ஏ.வி ராஜு
ஏ.வி ராஜு
  • புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல். பட்ஜெட்டில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

  • போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

  • சிதம்பரம் நடராஜர் கோயிலின் மூன்றாண்டு வரவு, செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பொது தீட்சதர்கள் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட 21 பேர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
பாகிஸ்தான்: நீண்ட இழுபறிக்குப் பின் முடிவு.. மீண்டும் கூட்டணி ஆட்சி.. பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்!
  • கோவையில் போக்குவரத்து காவலரும், ஆட்டோ ஓட்டுநரும் மாறிமாறி தாக்குதல். ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததை காவலர் கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக விளக்கம்.

  • மயிலாடுதுறை அருகே ரயிலில் பட்டிமன்ற பேச்சாளருக்கு பாலியல் துன்புறுத்தல். துணிவுடன் புகார் அளிக்க முன் வர வேண்டும் என வீடியோ வெளியிட்ட பெண்.

பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்கள்புதிய தலைமுறை
  • திருப்பத்தூர் ஆலங்காயம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்தில் கணவன் - மனைவி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

  • தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு எதிரொலிப்பால் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்கள் யாருக்கு சாதகம்? என புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணையதளம் வெளியிட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள்.

  • மேற்குவங்கம் சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம்.. வழக்குப்பதிவு செய்துள்ளது. மாநில அரசு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வசூலித்த வருமான வரித்துறை அதிகாரிகள். வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணத்தை எடுப்பது சட்டவிரோதம் என காங்கிரஸ் புகார்.

  • உத்தராகண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. விபத்தில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது இச்சோகம் அரங்கேறியுள்ளது.

  • ஸ்பெயின், போலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டத்தில், டிராக்டர்களில் பேரணியாக சென்று அரசு அலுவலகங்கள் முற்றுகை.

  • இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், ராஞ்சி சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  • உள்ளூர் போட்டியில் ஆந்திர வீரர் வம்சி கிருஷ்ணா ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். மேலும் ரவி சஸ்திரி, யுவராஜ் சிங், ருதுராஜ்-க்கு பிறகு சாதனை படைத்த 4-வது இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
17வது கோப்பை யாருக்கு? 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை அறிவிப்பு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
  • சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com