காலை தலைப்புச் செய்திகள் | தமிழக சட்டப்பேர்வை கூட்டத்தொடர் முதல் U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்று தொடங்கும் தமிழக சட்டப்பேர்வை கூட்டத்தொடர் முதல் இளையோர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா வரை நேற்றைய மற்றும் இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்puthiya thalaimurai

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. இந்நிலையில் வரும் 19ம் தேதி தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

 • உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 16ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • காங்கிரஸ் கட்சி ஏழைகள் மற்றும் விவசாயிகள் பற்றி தேர்தல் நேரத்தில் மட்டுமே நினைத்து பார்க்கும் என்று மத்தியப்பிரதேச தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்ரினை முன்வைத்துள்ளார்.

மோடி, ராகுல்
மோடி, ராகுல்ட்விட்டர்
 • இந்தியாவின் டி.என்.ஏவில் அன்பு மட்டுமே இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு. ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா நாடு முழுவதும் வெறுப்பை பரப்புவதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • தமிழகத்தில் திமுக தலைமையில் மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது என்று சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

 • ஜெ.பி.நட்டா பங்கேற்ற யாத்திரையில் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக பாஜக புகார். பொதுக்கூட்டத்துக்கு செல்லும் பாதையில் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.

தலைப்புச் செய்திகள்
“திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது” - சென்னையில் ஜெ.பி.நட்டா பேச்சு
 • தமிழகத்தில் முதல்முறையாக மும்முனை போட்டி நிலவுவதாக அண்ணாமலை பேட்டி. தேர்தலில் வாக்கு விகிதமே முக்கியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

 • பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதியளித்துள்ளார். அமித் ஷா அழைப்பு விடுத்ததாக கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

தலைப்புச் செய்திகள்
“உறுதியாக சொல்கிறோம்... பாஜகவுடன் கூட்டணி இல்லை” – குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்!
 • ‘நாட்டின் பிற நகரங்களை விட தமிழகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. நகரங்களை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

 • எம்.ஜி.ஆர் குறித்து பேச ஆ.ராசாவுக்கு தகுதியில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்.

 • தாராபுரம் அருகே செல்போன் டவரில் இருந்து இறங்கிய பிறகும் போராட்டத்தை தொடர்ந்த விவசாயிகள் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியுள்ளனர்.

 • கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ விளக்கமளித்துள்ளது.

 • பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. பள்ளிகளுக்கு சென்று கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 • டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத் தேர்வு. இதனைதொடர்ந்து வரும் 23ம் தேதி பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடைபெறும்.

 • கர்நாடகா மாநிலத்தில் பரவும் குரங்கு காய்ச்சல்... தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • கோவையில் My V3 Ads நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்துவதற்காக ஆட்களை திரட்டியதாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • தஞ்சையில் இருவேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை. மரணத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
 • ராமநாதபுரம் அருகே வலையில் சிக்கிய டால்பின்களை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள். உரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட வனத்துறையினர்.

 • கேரள மாநிலம் வயநாட்டில் விவசாயியை கொன்ற யானையை, 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கிறார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவ்.

 • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

 • டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த விவசாயிகள் முயலுவதால் எல்லையில் தடுப்பரண்களை அமைக்கும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

 • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் முதல் மூன்று இடங்களில் உள்ள கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 • 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இறுதிப் போட்டியில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தலைப்புச் செய்திகள்
WTC, ODI, U19 - 9 மாதங்களில் 3 ஐசிசி பைனலில் தோல்வி! இந்தியாவை வீழ்த்தி U19 WC வென்றது ஆஸி!
 • சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் ஐந்தாவது சதம் விளாசிய மேக்ஸ்வெல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்துகளில் சதமடித்துள்ளார்.

தலைப்புச் செய்திகள்
AUSvsWI | 5வது சர்வதேச டி20 சதம் - ரோகித் சர்மா சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்; 241 ரன்கள் குவித்த ஆஸி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com