“திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது” - சென்னையில் ஜெ.பி.நட்டா பேச்சு

“திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி, ஜனநாயகம் இல்லை; நான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன” - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாபுதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று சென்னை வந்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ள அவர், பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் சென்னை பயணத்திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு இருந்தன. அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் ஜெ.பி.நட்டா சென்னை புறப்பட்டார். மாலை 5.30 மணி அளவில் விமான நிலையம் வந்த அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து மின்ட் தங்கசாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காரில் செல்லும் நட்டாவுக்கு, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஜெ.பி.நட்டா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு.

பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி, ஜனநாயகம் இல்லை; நான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன” என்றார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்காவிட்டால் சாப்பிடாதீங்க: சிவசேனா எம்.எல்.ஏ.வின் வினோத உத்தரவு

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக-வின் யாத்திரையால் ஊழல்வாதிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள்; தாம்பரத்தில் நீடித்த குழப்பம்! என்ன நடந்தது?

இந்த கூட்டத்தில் சுமார் 5,000 தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்து ராமாபுரத்தில் உள்ள ஹோட்டலுக்கு செல்லும் ஜெ.பி.நட்டாவை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

மேலும், மாநில பாஜக நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு 9.45 மணிக்கு ஜெ.பி.நட்டா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக பலகட்ட முயற்சிக்குப் பிறகே நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினர் காவல்துறையினர். அவருடைய பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்

- பொதுக்கூட்டத்தை சோழிங்கநல்லூரில் நடத்த பா.ஜ.க. சார்பில் முதலில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

- இதையடுத்து நந்தனம் மற்றும் பெருங்குடியில் நடத்த அனுமதி கேட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

- தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள தனியார் பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்தவும், அண்ணாநகர் பகுதியில் சாலையில், ஜெ. பி.நட்டா சிறிது தூரம் நடந்து சென்று ஆதரவு திரட்டவும் பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

- அதேநேரம், வாலாஜா சாலையில் போக்குவரத்தை காரணம் காட்டி பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

ஆக மின்ட் தங்கசாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதற்கு அரசியல் நோக்கமே காரணம் என திமுக அரசை, பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com