காலை தலைப்புச் செய்திகள் | சென்னை திரும்பும் மக்கள் முதல் வெற்றியை தீர்மானித்த 2வது சூப்பர் ஓவர் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சென்னை திரும்பிய மக்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் முதல் வெற்றியை தீர்மானித்த 2 வது சூப்பர் ஓவர் வரை நேற்றைய மற்றும் இன்றைய அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்புகின்றனர் மக்கள். இதனால் சிங்கபெருமாள் கோவில் முதல் சென்னை வரை ஊர்ந்து வருகின்றன வாகனங்கள்.

  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம். அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசளிப்பு.

  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக இரண்டாமிடம் பிடித்த அபி சித்தர் குற்றச்சாட்டு. அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி விளக்கம்.

  • சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு. தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

  • திருச்சியில் 20-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை. பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

  • காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கார்னிவல் நிகழ்ச்சியை கண்டுரசிக்க ஏதுவாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

  • விமான ஓடுதளம் அருகே பயணிகள் உணவருந்திய விவகாரம். இண்டிகோ நிறுவனத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயும், மும்பை ரூபாயும் அபராதம்.

  • ஈரான் - இந்தியா இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை கருத்து.

  • பெல்ஜியம் நாட்டில் கடும் பனிப்பொழிவு. வெண்போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கும் நகரங்கள்.

  • கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டி. 2-வது சூப்பர் ஓவரில் திரில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி.

- இத்துடன் அனைத்து செய்திகளையும் மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com