தலைப்புச் செய்திகள்|ஆஸ்திரியாவில் பிரதமர் பெருமிதம் முதல் சாய்னா உடன் விளையாடிய குடியரசுத்தலைவர் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, இந்தியா குறித்து ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம் முதல் சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத்தலைவர் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்ட்விட்டர்
 • “இந்தியா ஒருபோதும் போரை தொடங்காது. உலகிற்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்திருக்கிறோம்” என ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி
ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி
 • ஊரகப்பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தருமபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

 • மக்களவை தேர்தலில் சந்தித்த தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை. 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?”-வேலுமணியின் கேள்வி..எடப்பாடியின் ரியாக்‌ஷன்! அதிமுகவில் நடப்பது என்ன?
 • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவு நடைப்பெற்றுள்ளது

 • நீட் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.

 • இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவலளித்துள்ளது.

 • இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வு.

President Droupadi Murmu with Saina Nehwal
President Droupadi Murmu with Saina Nehwal
 • சென்னையில் நள்ளிரவு பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால், புறநகர் பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

 • தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் பெட்டியில் ஏசி பழுதானதாக புகார் அளிக்கப்பட்டபோது, ரயிலின் அபாயச்சங்கிலியை இழுத்து ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 • பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் தங்கலான் பட டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
'சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'-பிரமாண்ட மேக்கிங்; மிரட்டும் தங்கலான் ட்ரெய்லர்!
 • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி. டி20 போட்டிகளில் 150ஆவது வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com