'சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'-பிரமாண்ட மேக்கிங்; மிரட்டும் தங்கலான் ட்ரெய்லர்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநர் பா. ரஞ்சித்தின் தங்கலான் பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தங்கலான்
தங்கலான்pt web

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் என பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தங்கலான். திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

தங்கலான்
தங்கலான்twitter

படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. பா. ரஞ்சித் விக்ரம் இணையும் திரைப்படம் கூடவே ஜிவி பிரகாஷ்-ம் இருக்கிறார். அதிகரித்த எதிர்பார்ப்புகளுக்கு இவர்களே போதுமான காரணங்களாக இருந்தனர்.

தங்கலான்
புயலை கிளப்பிய திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி பணம் கையாடல் விவகாரம் - தொடங்கியது விசாரணை

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கர்நாடகாவில் உள்ள கோலர் தங்க சுரங்கத்தில் வேலைப் பார்த்த தமிழர்கள் பட்ட துயரத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய 61வது படமான தங்கலானிற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுவென்ற ‘The Pianist’, ‘The Beach’, ‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாகி இருந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. காட்சிகளாக படம் பிரம்மாண்டமாக தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய உலகத்தை கண்முன் காட்டுகிறது கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு. ‘சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை’ வசனத்தில் மிரட்டுகிறது படத்தின் ட்ரெய்லர்.. ஆகஸ்ட் 15 ஆம் தேதி படமானது ரிலீஸ் ஆகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com