ஐபிஎல் கிரிக்கெட் சென்னையில் நடந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா அணி.
மேற்கு வங்கம் வங்கதேசத்திற்கு இடையே நள்ளிரவில் கரையைக் கடந்தது ரிமல் புயல். தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஒரு மாதம் நீட்டிப்பு. வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையுவுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை.
குஜராத்தில் விளையாட்டு மையத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தின், தீ விபத்து ஏற்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியீடப்படுள்ளது.
மதுரையில் இன்டர்சிட்டி ரயிலின் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில்,பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
சென்னையில் போதை ஊசி போட்டுகொண்ட 17 வயது சிறுவன் உயிரிழந்தநிலையில், போதை மாத்திரைகளை சப்ளை செய்த இருவரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பஞ்சாபை ஊழலின் மையமாக மாற்ற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக அமித் ஷா குற்றச்சாட்டு. இந்நிலையில், பாஜகவின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என, கெஜ்ரிவால் பேச்சு.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஹமாஸ் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால், காசாவில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு எனத் தகவல்.
ஹமாஸின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளநிலையில், பாலஸ்தீனத்தில் வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரிக்கை.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.