HEADLINES | ஃபெங்கல் புயல் முதல் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு வரை
வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்... இலங்கை கடற்பகுதி வழியாக தமிழக கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. சென்னையிலிருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை.
தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் இன்று நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது... நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தருகிறார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு... உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது... அதானி மீதான குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா முதலமைச்சர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். ஆளுநருடனான சந்திப்பின்போது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
வெற்றிமாறனின் அடுத்த திரைப்படமான விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் வெளியானது... கூர்மையான வசனங்களுடன் பரபரக்கும் காட்சிகளால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.