தலைப்புச் செய்திகள்: மது குறித்து மிஷ்கின் சர்ச்சை முதல் விடாமுயற்சி 2nd சிங்கிள் இன்று வெளியீடு வரை
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்... பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊர்ந்து சென்ற வாகனங்கள்...
குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
உதயநிதியை துணை முதலமைச்சராக்கியதே திமுக அரசின் சாதனை... எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
திமுகவின் சட்டப்பிரிவு மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானம்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம், நாடு முழுவதும் ஒரே அரசை கொண்டு வந்து மாநிலங்களை அழிக்க முயல்கிறது பாஜக என திமுகவின் சட்டத்துறை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவு பெற்றது. 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகராறில் ஈடுபட்ட சகோதரர்களை வெட்டி படுகொலை செய்த கும்பல்...
பாலிவுட் நடிகர் சஃயிப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தானே மது கூடத்தில் பணியாற்றி வந்தவரை கைது செய்தது காவல் துறை.
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல்வீசித் தாக்குதல்... பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் தான், தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும் என உறுதி.. 50 சதவீதம் என்ற இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பை உடைப்போம் என்றும் ராகுல் காந்தி பேச்சு...
தேஜஸ்வி யாதவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தை வழிநடத்தும் பொறுப்பு... கட்சியில் மாற்றம் செய்வது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க செயற்குழு அதிகாரம்...
கொள்ளு பேரன், பேத்தியுடன் பிறந்தநாளை கொண்டாடிய 105 வயது பாட்டி... ரத்த உறவுகளின் நடனத்தை கண்டு பல்லக்கில் அமர்ந்தபடியே நடனமாடி உற்சாகம்...
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலம் இன்றுடன் நிறைவு... பந்தள அரசு குடும்ப தரிசனத்திற்கு பிறகு நாளையுடன் கோயில் நடை அடைப்பு...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்... வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்...
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைது செய்ய தயாராகும் அமெரிக்கா... ட்ரம்ப் பதவியேற்ற மறுநாள் முதலே நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்த திட்டம்...
காசாவில் இன்று முதல் அமலாகிறது போர் நிறுத்தம்.... சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது...
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு உலகின் முதல்நிலை வீரர் ஜானிக் சின்னர் முன்னேற்றம்... மகளிர் பிரிவில் ஸ்வியாடெக் உள்ளிட்ட முன்னனி வீராங்கனைகள் 4ஆவது சுற்றுக்கு தகுதி.
குடி இருக்கும் போது வாழ்க்கை சந்தோசமாக, நம்பிக்கையாக இருந்ததாக பேசிய இயக்குநர் மிஷ்கின்.... மதுவிற்கு எதிராக உருவாகியுள்ள படத்தின் விழாவில் சர்ச்சை பேச்சு...
அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் "சவதீகா" பாடலை தொடர்ந்து 2ஆவது பாடலை வெளியிடும் படக்குழு... இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு...