தலைப்புச் செய்திகள்: காவல்நிலையத்தில் ஆஜரான அல்லு அர்ஜுன் முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வரை
கேரளா, பீகார் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்களை பணியிடம் மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
வாடிகனில் போப் ஃபிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய இந்திய புவிசார் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பல்லுயிர் பாரம்பரிய தலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கருத்துருக்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறு ஆய்வுக்கு உத்தரவிடாமல், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவது சகஜம் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதே தொகுதியில் களம் இறங்க திமுகவினருக்கும் விருப்பம் இருக்கும் என அமைச்சர் முத்துசாமி கருத்து...
காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு... டிக்கெட் கட்டணம் உயராது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு... விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
புஷ்பா -2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்தது தொடர்பான வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரானார் நடிகர் அல்லு அர்ஜுன்.... 3 மணி நேர விசாரணையில் 20 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேசத்திற்காக மேலும் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவிப்பதே இலக்கு என கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பெயர் இடம்பெறாத சர்ச்சை குறித்து துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பதில் அளித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா அணி
ஹைதராபாத்தில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் அஜித் குமார் குடும்பத்தினருடன் பங்கேற்றார்.