காலை தலைப்புச் செய்திகள் | வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முதல் ‘ஜனநாயகப் பெருவிழா’ வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முதல் கர்நாடகா கந்துவட்டி விவகாரம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து மூலம் மக்களின் மனங்களை அறிய புதிய தலைமுறை ஏற்பாடு செய்துள்ளது. ‘ஜனநாயகப் பெருவிழா - தேர்தல்னா புதிய தலைமுறை’ என்ற பெயரில் பேருந்து தமிழ்நாடு முழுவதும் செல்ல உள்ளது!

ஜனநாயகப் பெருவிழா - தேர்தல்னா புதிய தலைமுறை
ஜனநாயகப் பெருவிழா - தேர்தல்னா புதிய தலைமுறை

தமிழகத்தில் 3 கூட்டணிகள் அமைந்தாலும் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேண்டியது கிடைத்தவுடன் பாமக வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டது என திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறித்துக்கொண்டது என பெரியகுளத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரைக்கு வந்தவர்களுக்கு பணம் விநியோகம் 200 ரூபாய் வழங்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளம்பியுள்ளது.

தலைப்புச் செய்திகள்
உதயநிதி பரப்புரையில் பங்கேற்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் - வசமாக சிக்கிய வீடியோ காட்சிகள்!

பாஜக வேட்பாளர் ராதிகாவுக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு சரத்குமார் பணம் கொடுத்ததாக புகைப்படத்துடன் காவல்நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறியதால் திருச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சலசலப்பு. தனிச்சின்னத்தில்தான் போட்டி என மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆவேசம்

தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்ததாக, நேரில் விசாரித்தபின் வைகோ தகவல் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி காவல்துறை வழக்குப்பதிவு செய்யதுள்ளது.

தேனியில் அமைச்சர் உதயநிதி வருகையை வரவேற்க நடப்பட்ட கொடிக்கம்பங்கள் என விதிமுறைகளை மீறியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு

திமுக பரப்புரை கூட்டம்
திமுக பரப்புரை கூட்டம்

தென்சென்னை பாஜக தேர்தல் அலுவலகம் அனுமதியின்றி செயல்பட்டதாக பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் செல்வாக்கை கொண்ட ஜி.கே. வாசனுக்கு பிரதமர் மோடி மரியாதை கொடுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை, நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீட்டித்து வருகிறது. சீட் பெறுவதில் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத், மேனகா காந்தி உள்ளிட்ட 111 வேட்பாளர்கள் கொண்ட 5ஆம் கட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக.

தலைப்புச் செய்திகள்
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

சிறையில் இருந்தபடி முதலமைச்சர் பணியை தொடர்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில், பதவி விலக வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணியில் திடீர் குழப்பம். கூட்டணியை விட்டு விலகப் போவதாக போர்க்கொடி தூக்கிய அஜித் பவார்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

புதுச்சேரியில் முருகனுக்கு 10 லிட்டர் மிளகாய் பொடி கரைசல் மூலம் அபிஷேகம். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி விநோதமாக நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

புதுக்கோட்டை அருகே வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர விழா எதிர்பாராதவிதமாக பட்டாசு பட்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் காயம்.

கர்நாடகாவில் கந்துவட்டி விவகாரத்தில் கடன் பெற்றவர் மீது ஆசிட் வீச்சு... வாங்கிய தொகையைவிட மூன்று மடங்கு அதிகம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் இப்படி செய்ததாக ஆசிட் வீசியவர் வாக்குமூலம்.

புவி நேரத்தை கடைபிடிப்பதற்காக விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாரிஸ் ஈபிள் டவர், சிட்னி, ஹாங்காங், ரோம் நகரங்கள் இருளில் மூழ்கின.

புவி நேரம் கடைபிடிக்க அணைக்கப்பட்ட விளக்குகள்
புவி நேரம் கடைபிடிக்க அணைக்கப்பட்ட விளக்குகள்

போலந்து நாட்டில் வசந்தகாலத்தை வரவேற்கும் பழமையான திருவிழாவை குடும்பத்தினருடன் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் விளாடிமிர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி.

ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத் த்ரில் கடைசி ஓவரில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். நிகோலஸ் பூரன், கே.எல்.ராகுலின் அரைசதம்.

தலைப்புச் செய்திகள்
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com