தலைப்புச் செய்திகள்: சூப்பர் 8-க்குள் இந்திய அணி To 40 இந்தியர்கள் உயிரைக்குடித்த குவைத் தீ விபத்து!

நாட்டின், உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தகவல்களை இன்றைய தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்..
குவைத் தீ விபத்து, ind vs usa
குவைத் தீ விபத்து, ind vs usapt web
  • குவைத் நாட்டில் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் வசித்த தமிழர்களின் நிலை குறித்த தகவல், ஏதும் வெளியாகவில்லை.

  • குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடம்
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம்pt web
  • “குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்க” என அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

  • 3 ஆவது முறையாக பதவியேற்ற பின் இத்தாலி நாட்டுக்கு பிரதமர் மோடி, முதல் பயணம் மேற்கொள்கிறார். இன்று தொடங்கும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இத்தாலி புறப்படுகிறார்.

குவைத் தீ விபத்து, ind vs usa
பிரஸ்ஸுக்கு அண்ணாமலையின் ‘நோ, நோ’; தமிழிசைக்கு அமித் ஷாவின் ‘நோ, நோ’; என்ன நடக்கிறது பாஜகவில்?
  • நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. புனிதத்தன்மை சமரசம் செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

  • முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சித்து வரும் சூழலில், மத்திய முதன்மை கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் pt web
  • விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி, தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

  • மறுவாக்குப்பதிவு வேண்டும் என விஜயபிரபாகரன் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என விருதுநகரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

ind vs usa
ind vs usapt web
  • டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி. நேற்று நடந்த போட்டியில் அமெரிக்க அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

குவைத் தீ விபத்து, ind vs usa
தற்கொலை முயற்சி டூ ஆந்திராவின் துணை முதல்வர் வரை: பவன் கடந்து வந்த பாதை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com