இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் | மகளிர் டென்னிஸ் போட்டி

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் செய்யப்பட்டது முதல் மகளிர் டென்னிஸ் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன் என புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

 • தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் நியமனம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

 • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை குழுத் தலைவர் ராஜேஷ்குமார் இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பதால் பயணிகள் அவதியுற நேரிடும். பயணிகளின் சிரமத்தை போக்க கூடுதல் மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • ஆந்திரா, கர்நாடகாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியால், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 • நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி.

 • நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. பாசிசம் வீழும் இந்தியா வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 • நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் உறுதியாக கிடைக்கும்.ஆகவே சின்னம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக சீமான் தகவலளித்துள்ளார்.

 • மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அதிமுக அறப்போராட்டத்தை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

 • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • ஆர்டிஐ மூலம் கிடைக்கப்பெற்ற பரந்தூர் விமான நிலையத்தின் வரைபடம் மூலம் ஏகனாபுரம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் வழியே விமான ஓடுபாதை அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • அபுதாபியில் உண்ண உணவு, வசிக்க இடமின்றி தவித்து வரும் தமிழக தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்குமாறு வீடியோ பதிவிட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 • கன்னியாகுமரியில் உணவகத்திற்கு ஆட்களை அழைத்து வருவதில் வடமாநில தொழிலாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தி, கம்புடன் அடிதடியில் ஈடுபட்டு, பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 • கழிவுநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட உறை குழியில் விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் அரியலூர் அருகே அரங்கேறியுள்ளது.

 • நச்சு ரசாயனம் கலக்கப்படுவது உறுதியானால் அதிரடி நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு.

 • திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

 • வானிலையை துல்லியமாகக் கணிக்கும் திறன் கொண்ட இன்சாட் 3DS செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்கான நடவடிக்கை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 • டெல்லி சட்டமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி.

 • சீனாவில் திடீரென வீசிய பனிப்புயலில் சிக்கிய வாகன ஓட்டிகளை நீண்ட நேரம் போராடி மீட்புக்குழுவினர் மீட்டனர்.

 • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் சதம் விளாசினார் ஜெய்ஷ்வால். 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

 • கத்தாரின் தோகாவில் நடந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போலாந்து வீராங்கனை.

 • சென்னை போரூர் அருகே நடந்த "கோட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார் நடிகர் விஜய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com