இந்திய அணி, அஜித் குமார்
இந்திய அணி, அஜித் குமார்pt web

முக்கிய தலைப்புச் செய்திகள் | இந்தியா - நியூஸி மோதல் To புதிய சாதனை படைத்த குட் பேட் அக்லி டீசர்!

இன்றைய தலைப்புச் செய்திகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா முதல் குட் பேட் அக்லி பட டீசரின் சாதனை வரை..
Published on

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனுவை மீனவர்கள் அளித்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி, திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மழை
மழைஎக்ஸ் தளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, குமரியில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, தன்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி, அஜித் குமார்
மலையாள நடிகையா.. கன்னட தேவதையா? யார் இந்த கயாது லோஹர்? சுவாரஸ்ய பின்னணி!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்... மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்...

ரமலான் மாதம் பிறந்ததையொட்டி நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள்... தமிழகம் முழுவதும் மசூதிகளில் சிறப்புத் தொழுகை...

திருமாவளவன்
திருமாவளவன்pt web

4 எம்.எல்.ஏ., 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை... அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும் என திருமாவளவன் பேச்சு...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது... பாஜகவைத் தொடர்ந்து ஜிகே வாசனும் அறிவிப்பு...

ஆண்டிப்பட்டி சந்தையில் தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு விற்பனை... வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை...

இந்திய அணி, அஜித் குமார்
"திருப்பதி | திருமலை வான்வழியில் விமானம் பறக்கத் தடைசெய்ய வேண்டும்" - கோரிக்கையின் பின்னணி இதுதான்!

உத்தராகண்ட்டில் பனிச்சரிவில் சிக்கிய 55 தொழிலாளர்களில் 46 பேர் உயிருடன் மீட்பு... 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து பேரை மீட்கும் பணிகள் தீவிரம்....

நாட்டின் முதல் ஷோரூமை மும்பையில் திறக்க எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் முடிவு.... பாந்த்ரா பகுதியில் திறக்கப்படும் ஷோரூமிற்கு மாத வாடகை 35 லட்சம் ரூபாய் என தகவல்...

அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் ட்ரம்ப்
அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் ட்ரம்ப்pt web

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவு உக்ரைனுக்கு முக்கியம்... வெள்ளை மாளிகையில் நடந்த கசப்பான சம்பவம் தொடர்பான கேள்விக்கு ஜெலன்ஸ்கி பதில்....

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்... கேப்டன் ரோஹித் சர்மா, முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்...

யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த தமிழ் திரைப்பட டீசர் என்ற பெருமையைப் பெற்றது குட் பேட் அக்லி.... ஒரே நாளில் 3.2 கோடி பார்வைகளைக் கடந்த அஜித்தின் அசத்தல் டீசர்....

இந்திய அணி, அஜித் குமார்
"நான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் அந்த இடத்தை.." - அன்புமணி ஆவேசம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com