இன்றைய முக்கியச் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்!
Published on

கனமழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசிக்க, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஸ்ரீ‌நகர் செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர், காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் எனக் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக் கொள்வது என பாகிஸ்தான் முடிவு செய்துள்ள நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ‌தங்கள் நாட்டு வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் 4 தாலுக்காக்களுக்கு 4 வது நாளாக இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com