#TopNews முதல்வரின் பொங்கல் பரிசு அறிவிப்பு முதல் லண்டன் பொதுமுடக்கம் வரை!

#TopNews முதல்வரின் பொங்கல் பரிசு அறிவிப்பு முதல் லண்டன் பொதுமுடக்கம் வரை!
#TopNews முதல்வரின் பொங்கல் பரிசு அறிவிப்பு முதல் லண்டன் பொதுமுடக்கம் வரை!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசு. ஜனவரி 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுயலாபத்துக்காக பொங்கல் பரிசை உயர்த்தி அறிவித்துள்ளாரா முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி. கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தல்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தங்கள் கட்சித் தலைமையே அறிவிக்கும். அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி.

வேளாண் சட்ட பிரச்னையில் இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கப்படும் என பிரதமர் ட்விட்டரில் தமிழில் பதிவு. ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை என மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் தகவல்.

அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் வரைபடம் வெளியீடு. மசூதியுடன் மருத்துவமனையும் கட்டப்படுகிறது.

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ். தலைநகர் லண்டன் உள்பட பல இடங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பு.

அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த பரிதாபம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com