இன்று முற்றுகையிட விவசாயிகள் திட்டம்... உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி!

மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று திட்டமிட்டபடி டெல்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டெல்லி
டெல்லி புதிய தலைமுறை

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவது தொடர்பாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் அண்மையில் அறிவித்தனர். இந்நிலையில், சண்டிகரில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய், பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

கிசான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பாந்தர் இது குறித்து தெரிவிக்கையில், “மத்திய அரசு எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அதனால் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

டெல்லி
தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு? முதல்வருக்கு செந்தில் பாலாஜி கடிதம்!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய
அமைச்சர் அர்ஜூன் முண்டா, “எந்த பிரச்னையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது” என தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் 200 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருந்து ஹரியானா வழியாக இரண்டாயிரத்து 500 டிராக்டர்களுடன் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளனர்.

டெல்லி
விவசாயிகள் பேரணி | டெல்லிக்குள் வராதபடி பலகட்ட தடுப்பு நடவடிக்கைகள்

விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாதபடி ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லையில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com