விவசாயிகள் பேரணி | டெல்லிக்குள் வராதபடி பலகட்ட தடுப்பு நடவடிக்கைகள்

டெல்லியை நோக்கி நாளை பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எல்லையில் தடுப்பரண்களை அமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி
டெல்லிபுதிய தலைமுறை

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி - ஹரியானா எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இப்போராட்டம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டத்தினை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளும் ஒரு சில கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளை (13.2.2024) டெல்லியை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி,

- விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் தேவை,

- விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

- லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்,

- மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட வேண்டும்

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி
“சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம்” - பிரதமர் மோடி

இதற்காக பஞ்சாபில் இருந்து 2000 டிராக்டர்கள், உ.பி யில் இருந்து 500, ராஜஸ்தானில் இருந்து 200 டிராக்டர்களில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல திரட்டுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை நடைபெற இருக்கும் இந்த போராட்டதிற்கு கிஷான் மோச்சா, கிசான் மஸ்டோர் மோச்சா போன்ற 200 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக, ’போரட்டத்தினை கைவிட வேண்டும்’ என்று விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எத்தகைய உடன்பாடும் எட்டப்படாததால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நித்யானந்த ராய், அர்ஜீன் முண்டா ஆகியோர் கொண்ட குழு இன்று மீண்டும் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் சுமூகமாக முடியாத நிலை ஏற்பட்டால், நாளை டெல்லியில் முற்றுகையிட நேரும். அதனால் அதனை எதிர்க்கொள்ள டெல்லியின் எல்லை பகுதியின் பல்வேறு சாலைகளில் இரும்பு, கான்கிரீட் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் டெல்லியின் எல்லையில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com